
அண்மையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளை இலங்கை மலையகப் பகுதியில் கொரோனா நிவாரண நிதி வழங்கியிருந்தோம். அதன் வழி 190 குடும்பங்கள் 1 வார உணவுத்தேவைக்கு உதவி செய்யப்பட்டது.
தமிழகத்தின் வேதாரணியம் பகுதியிலிருந்து மேலும் ஒரு கோரிக்கை வந்ததை அடுத்து மே 26, 2020 (செவ்வாய்) நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டம் சுற்றியுள்ள கிராமங்களிலும் கீழுள்ள வகையில் தேவையானோருக்கு நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது.
அரிசி – 5 கிலோ
சோம்பு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
கடுகு – 100 கிராம்
மிளகு – 50 கிராம்
மஞ்சள் தூள் – 50 கிராம்
மிளகாய்த் தூள் – 100 கிராம்
சாம்பார் தூள் – 200 கிராம்
டீ தூள் – 50 கிராம்
பற்பசை – 1
துணி சோப் – 2
குளியல் சோப் – 1
பெரிய வெங்காயம் – 1 கிலோ
தக்காளி – 1 கிலோ
எண்ணெய் – 1/2 லிட்டர்
முகக்கவசம் – 2
பை – 1
நாப்கின் – 1 (பேக்)
ஒருங்கிணைப்பாளர் தோழர். திரு.சிவக. மணிவண்ணன் தலைமையில் ஒரு குழு இத்தேவையை நிறைவேற்றுவர் என்பதை தங்கள் மேலான கவனத்திற்குத் தெரிவிக்கின்றோம்.
***குறிப்பு:
இந்த அறிவிப்பு தகவலுக்காக மட்டும். யாரும் நேரில் சென்று நமது குழுவினருக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். உதவி விபரங்கள் நிகழ்விற்குப் பின் காணொளிகளாகவும் புகைப்படங்களாகவும் பின்னர் வெளியிடப்படும்.


நிதி நல்கி உதவியவர்:
தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பியக் கிளை
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
1.சூரிச் வெற்றிக்கோன் தமிழ்ப்பள்ளி
2.திரு.ஸ்ரீகந்தா குடும்பத்தினர்
3.முனைவர்.க.சுபாஷிணி
4.திரு.கார்த்தீஸ்வரன் காளீஸ்வரன்
மற்றும் .. .. .. .. ..
தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகக் குழு
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
1.திரு.லூயிஸ் மார்ட்டின்
2.திரு.கௌதம சன்னா
3.திரு.இனிய நேரு
4.திரு. கிருஷ்
5.திரு.இளங்கோ
6.மேலும் ஒருவர் (அவர் பெயர் வங்கிக் குறிப்பில் தெரியவில்லை)
அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி!
நம் கண்களுக்கு எதிரே பொதுமக்களும் குழந்தைகளும் பசியால் வாடித் தவிப்பதைத் தவிர்ப்பதற்கு நம்மால் முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டி கை கொடுப்பதும்; சக மனிதரின் பசிப்பிணியைப் போக்குவது தான் நாம் இந்தப் பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமையாகத் தமிழ் மரபு அறக்கட்டளை கருதுகின்றது.