கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு-playlist
https://www.youtube.com/
playlist?list=
PLdag7q0k9BNmTNEZoxHssp4yONvnMTRmF

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு நிறுவனம் உலக மகளிரை ஒன்றிணைக்கும் முகமாக, அவர்களது கடிகை தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகத்தின் முன்னெடுப்பாக,  “வையத் தலைமைகொள்” என்ற ஐந்து நாள் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கை ஜூலை 8-12 நாட்களில் இணையம் வழி நடத்தியது. 
நிகழ்ச்சியின் முதல் நாள் தற்காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்களைச் சுட்டிக் காட்டி கருத்தரங்கின் தேவையை வலியுறுத்தி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் க.சுபாஷிணி  அவர்கள் விழாவைத் துவக்கி வைத்தார்கள்.  அன்றும் தொடர்ந்து வந்த   நாட்களிலும்,பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள் – துணிந்து சொல்;நெசவு போற்றுவோம்! பருத்தி, நெசவு – நம் பண்பாடு;செம்மை மாதர்!  – பல்துறைப் பெண்ணாளுமைகள்;தளை தகர்ப்போம் – பெண்களுக்கெதிரான வன்முறைகள்;முந்நீர் மகடூஉ – 20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தமிழ்ப்பெண்கள்என்ற தலைப்புகளின்கீழ் பல்வேறு  துறைசார் வல்லுநர்களும் ஆய்வாளர்களுமான பெண்மணிகள் பலர்  உரையாற்றினார்கள்.  
கருத்தரங்கின் நான்காம் நாளில் பெண்ணியவாதியும்,  உளவியல் நிபுணருமான  டாக்டர் ஷாலினி அவர்களும், சமூக நீதி போராளியும்  உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான  கிருபா முனுசாமி அவர்களும் பங்கேற்று தங்கள் துறைசார் ஆலோசனைகளை  வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமிகு. முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சிறப்புரையுடன் சிறப்பிக்கப்பட்ட கருத்தரங்கில்,   இந்த நூற்றாண்டில் பெண்களைப் பாதிக்கும் பல இடர்கள் அடையாளம் காணப்பட்டு  அவற்றைக் களைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, பெண்களும் ஆண்களும் அரசும் சமுதாயமும் பெறவேண்டிய விழிப்புணர்வு ஆகியவை வலியுறுத்தப்பட்டது. 
கல்வி, பொருளாதார பலம், பொருளாதார சுதந்திரம், துணிச்சல், முடிவெடுக்கும் தைரியம்,  அதோடு சுயமரியாதை ஆகியவை அவர்கள் அணிய வேண்டிய அணிகலன்கள் எனப் பெண்களால் கருதப்பட வேண்டும் என்ற முன்மொழிதலுடன் விழா நிறைவுற்றது. கருத்தரங்க நிகழ்வுகளை யூடியூப் காணொளிகளாக இங்கு காணலாம். கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு-playlist https://www.youtube.com/playlist?list=PLdag7q0k9BNmTNEZoxHssp4yONvnMTRmF

வையத் தலைமைகொள்
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
2020 – கருத்தரங்க நிகழ்வு யூடியூப் காணொளிகளாக


கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு-playlist
https://www.youtube.com/playlist?list=PLdag7q0k9BNmTNEZoxHssp4yONvnMTRmF

பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள் – துணிந்து சொல்
முதல் நாள் – ஜூலை 8, 2020 – வையத் தலைமைகொள்
https://youtu.be/dbSE7m6kZ9Y

நெசவு போற்றுவோம்! பருத்தி, நெசவு – நம் பண்பாடு
இரண்டாம் நாள் – ஜூலை 9, 2020 – வையத் தலைமைகொள்
https://youtu.be/qLLL5um-414

செம்மை மாதர்! – பல்துறைப் பெண்ணாளுமைகள்
மூன்றாம் நாள் – ஜூலை 10, 2020 – வையத் தலைமைகொள்
https://youtu.be/DAxdrZMH6iE

தளை தகர்ப்போம் – பெண்களுக்கெதிரான வன்முறைகள்
நான்காம் நாள் – ஜூலை 11, 2020 – வையத் தலைமைகொள்
https://youtu.be/1gjk9_xdSj0

முந்நீர் மகடூஉ – 20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தமிழ்ப்பெண்கள்
நிறைவு நாள் – ஜூலை 12, 2020 – வையத் தலைமைகொள்
https://youtu.be/R3ZCwWgiS6c


வையத் தலைமைகொள் -பெண்கள் கருத்தரங்கு –
சிறப்புரை: மக்களவை உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன்
https://youtu.be/3_hSxjdIB2U

கைத்தறி நெசவு நம் தமிழர் மரபு -நெசவு போற்றுவோம்!
https://youtu.be/Ty8i2H_a8Eo


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *