கல்வெட்டாய்வாளர் திரு.துரை சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி

தமிழ் மரபு அறக்கட்டளையின் கல்வெட்டு ஆய்வுப் பணிகளில் நீண்ட காலம் தம்மை ஈடுபடுத்திக் கொண்டரும் நீண்டகாலமாகக் கல்வெட்டு ஆய்வுகளைத் தொய்வில்லாது மேற்கொண்டு பல அறிய ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியவருமான கொங்குப் பகுதியைச் சார்ந்த திரு.துரை சுந்தரம் அவர்களின் மறைவு தமிழக வரலாற்று ஆய்வுலகத்திற்கு ஒரு மாபெரும் இழப்பாகும்.

கொங்குப் பகுதியின் பல பகுதிகளில் இணைந்து களப்பணிக்குச் சென்றிருக்கின்றோம். அந்தியூர், அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்துதிருக்கின்றோம்.

அண்மையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நான் களப்பணிக்குச் சென்றிருந்த போது நேரில் வந்து கலந்து கொண்டதோடு முழு நாளும் ஆய்வில் ஈடுபட்டு அனைத்து பதிவுகளிலும் முழுமையாகக் கலந்து கொண்டார்.

2017ம் ஆண்டு திரு.துரை சுந்தரம் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தொடர்ந்த வரலாற்று ஆய்வுப் பணிக்காகப் பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பித்தோம்.

n

திரு.துரை சுந்தரம் அவர்களது தமிழக வரலாற்று ஆய்வுப்பணி காலத்தால் அழியாது. தமிழ் மரபு அறக்கட்டளையின் அஞ்சலியை அவருக்குச் சம்ர்ப்பிக்கின்றோம்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *