தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 2001லிருந்து 2020 வரை கடந்து வந்த பாதை

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
2001லிருந்து 2020 வரை கடந்து வந்த பாதை
https://youtu.be/cK44QcuMod4

அனைவருக்கும் வணக்கம்.

20ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – 2001லிருந்து 2020 வரை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறோம்

2001 ஆகஸ்ட் 27 ஆம் தேதி தமிழ் மரபு காப்பு என்ற குறிக்கோளுடன் பணியாற்றத் தொடங்கிய எமது அரசு சாரா தொண்டு நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை
19 ஆண்டுகள் …
அல்லது 228 மாதங்கள் …
அல்லது 991 வாரங்கள் …
அல்லது 6,940 நாட்கள் …
அல்லது 166,560 மணி நேரங்கள் …
அல்லது 9,993,600 நிமிடங்கள் …
அல்லது 599,616,000 நொடிகள் எனக் கடந்து;
பன்னாட்டு அறக்கட்டளை நிறுவனமாக விரிந்து; பல தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆதரவுடன் தொடர்ந்து பற்பல பணிகளில் உங்கள் உதவியுடன் எங்களை ஈடுபடுத்திக் கொண்டு மனநிறைவுடன் செயலாற்றினோம்.

20ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனம் பெருமிதத்துடன் இத்தகைய வளர்ச்சியை, நாம் கடந்து வந்த பாதையை நண்பர்களுடன் இணைந்து திரும்பிப் பார்த்து மகிழ விரும்புகிறோம். எங்களுக்கு ஊக்கமளித்து வளர உதவிய உங்கள் அன்புப் பெருமழைக்கு நன்றி சொல்லி மகிழ்கிறோம். வாருங்கள் தமிழ் நலம் காக்கும் பயணத்தை நாம் தொடர்வோம். நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – 2001லிருந்து 2020 வரை கடந்து வந்த பாதை
காணொளி: https://youtu.be/cK44QcuMod4

அன்புடன்
தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *