
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2021/04/CONTENT-THFi-MinTamilMedai-25.pdf
தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்
மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 25 [ஏப்ரல் – 2021]
வணக்கம்.
தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்..

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
காலாண்டிதழ் வரிசையில் இந்த “25 ஆவது இதழ்” ஒரு மைல் கல், இந்த இதழும் கூகுள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக வழக்கம் போல இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதழைப் படிக்க:
மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 25 [ஏப்ரல் – 2021]
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2021/04/CONTENT-THFi-MinTamilMedai-25.pdf
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது
“தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!”
என்பதாகும்.
மேலும்….
ஏப்ரல் 2015 முதல் ஏப்ரல் 2021 மின்தமிழ்மேடை இதழ்கள் வரை
பங்களிப்பு – இந்த இதழ் உட்பட 25 இதழ்களில் ………
(இங்கு பார்க்க: https://bit.ly/3varfuX)
154 எழுத்தாளர்கள்
848 பதிவுகள்
இந்த 25 ஆவது மின்தமிழ்மேடை இதழில், இந்த இதழ் வரை பங்கேற்ற ஆசிரியர்கள் பெயர் பட்டியல்
இந்த இதழின் இறுதியில், அகர வரிசையில் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது
கூகுள் புக்ஸ் தளத்தில் அனைத்து மின்தமிழ்மேடை இதழ்களையும் இங்கு பெறலாம்:
https://tinyurl.com/mintamiledai
பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை