தொல்மனிதர்களின் தெய்வங்கள்
– முனைவர் க. சுபாஷிணி
ஹோலென் ஃபெல்ஸ் வீனஸ்
https://youtu.be/SfDPZVSuAfk
ஜெர்மனியின் சுவேபியன் யூரா குகைகளும் பழங்கற்கால தொல் மனிதர்கள் வாழ்ந்த பகுதிகளும் ஏராளமான தொல்லியல் அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளன. ஏறக்குறைய 33,000லிருந்து 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால வாக்கில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் அகழ்வாய்வில் கிடைத்தன. முதல் மூன்று குகைகளும் இருக்கும் பகுதி ஆஹ் பள்ளத்தாக்கு என்றும், அடுத்த மூன்று குகைகளும் இருக்கும் பகுதி லோன பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் அரும்பொருட்களில் விலங்குகளின் கொம்பினால் மற்றும் மாமுத் எனப்படும் விலங்கின் தந்தத்தினால் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க கலைவடிவங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் ஹோலென் ஃபெல்ஸ் வீனஸ் என்ற பெண் தெய்வ வடிவம், பல்வேறு விலங்குகளின் வடிவம், புலி மனிதனின் உருவம், புல்லாங்குழல் போன்றவை உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை விளக்குகின்றது இந்தக் காணொளி.