“திரள்” – தமிழ்ச் செய்தித் திரட்டி (https://thiral.in/mapview) அறிமுகம்: திரு. செல்வமுரளி
அக்டோபர் 17, 2021 — திசைக் கூடல் – 235
“திரள்” – தமிழ்ச் செய்தித் திரட்டி (https://thiral.in/mapview) அறிமுகம்
— திரு. செல்வமுரளி
https://youtu.be/ZYONLzkNjR4
திரள், தமிழ்ச் செய்திகளைப் பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து திரட்டி நவீன மொழித் தொழில்நுட்ப உதவியுடன் தரும் ஒரு முயற்சி. இங்கே பகிரப்படும் செய்திகள் அனைத்தும் பதிப்பாளருக்கே உரிமை. இதில் வாசகருக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் சிறியளவுப் படமும் சில வரி செய்தியும் மட்டுமே காட்டப்படும். கூடுதல் செய்திகளை அத்தளத்திற்குச் சென்று படிக்கலாம். கடந்த ஒருநாளில் அதிகம் பேசப்படும் தலைப்புகள், அதிக செய்தி கொண்ட மாவட்டங்கள், அதிகம் பயன்பட்ட குறிச்சொற்கள், நிலப்படவழிச் செய்திப் பரவல் போன்றவை காட்டப்படுகின்றன.
ஒவ்வொரு செய்தியையும் செயற்கை நுண்ணறிவும் வாணியின் இயல்மொழி பகுப்பாய்வும் கொண்டு பெயர் பொருள் சுட்டி(entity identification) மற்றும் குறிச்சொல் (keyword identification) கணித்து, புவியியல் தகவல் முறைமையுடன்(GIS) காட்சிப்படுத்தப்படுகிறது. பேசு பொருள்வாரியாகவும், காலவாரியாகவும் செய்திகள் தொகுக்கப்படுகிறது.
“திரள்” தளம் பற்றிய அறிமுகம், தொழில்நுட்பம், பயன்பாடு பற்றி இந்த ‘திசைக் கூடல்’ நிகழ்ச்சியில் அறிந்துகொள்ளலாம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி நிகழ்ச்சி
திசைக் கூடல் – 235
அக்டோபர் 17 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
“திரள்” – தமிழ்ச் செய்தித் திரட்டி (https://thiral.in/mapview)
(அறிமுகம் மற்றும் கலந்துரையாடல்)
அறிமுகம்:
திரு. செல்வமுரளி
நிறுவனர், விசுவல் மீடியா டெக்னாலஜிஸ்
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, இந்தியா
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு