திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் கல்விச் சுற்றுலா
தேவாரம் பாடிய மூவரும் வந்து தரிசித்த திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில்..தமிழ்நாட்டின் இலக்கியம் மற்றும் வரலாற்றில் இதன் சிறப்புகள்… இக் கோயில் கொண்டிருக்கின்ற கல்வெட்டுகள்.. அவை சொல்லும் செய்திகள்..ஞாயிற்றுக்கிழமை-20/02/2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் கல்விச் சுற்றுலாவில்.. இவற்றை நேரடியாக நமக்கு விளக்குகிறார் தமிழகத் தொல்லியல் துறையின் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி
தமிழ் மரபு அறக்கட்டளையின் பிப்ரவரி 2022 திருவொற்றியூர் மரபு பயணத்தில் வரலாற்று ஆர்வலர்கள் …படம் உதவி – எழுத்தோவியர் நாணா
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திருவொற்றியூர் பயணம் கல்விச்சுற்றுலா நேற்று மதியம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவு செய்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து வரலாற்று ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கோயில் தொடர்பான செய்திகளை தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்கள் விளக்கமளித்தார்கள். அவருடன் துணையாக முனைவர் சசிகலா அவர்களும் வரலாற்றுச் செய்திகளையும் கல்வெட்டுச் செய்திகளையும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய திருவொற்றியூர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி.கோயில் என்பது வழிபாட்டிற்கு மட்டுமே என்ற சிந்தனையில் இருந்து விடுபட்டு திருவொற்றியூர் கோயில் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தங்கியிருக்கும் ஒரு வரலாற்று ஆவணப் பாதுகாப்பகம் என்ற சிந்தனையை நேற்றைய கல்விச் சுற்றுலா வழங்கியது. இத்தகைய எண்ணற்ற கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை முறையாக அறிந்து கொள்வதும் அவற்றை பாதுகாப்பது அவசியமாகும்.
-சுபா