Home E-Books மின்னூல்: பெண் பூப்பின் புனித வழிபாடு

மின்னூல்: பெண் பூப்பின் புனித வழிபாடு

by admin
0 comment

THF Announcement – E-books update: பெண் பூப்பின் புனித வழிபாடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று …
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்கள் எழுதியுள்ள, அவரது “பெண் பூப்பின் புனித வழிபாடு” என்ற நூல் மின்னூலாக இணைகின்றது.

நூலாசிரியர் முனைவர்.செ. இராஜேஸ்வரி மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றுள்ள இவர் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நூல்களை சமூகப் பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு, புனைவிலக்கியம், திறனாய்வுகள், முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு என்று பல பிரிவுகளில் எழுதியுள்ளார்

“பொதுவாகவே வெளிப்படையாகப் பேசத் தயங்கும், ஆனால் பண்பாட்டுச் சூழலில் பெரும்பாலும் மறைமுகமாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் நிகழ்த்தப் படுகின்ற பல்வேறு சடங்குகளை இந்த நூல் பண்பாட்டு மானுடவியல் பார்வையில் அலசுகிறது,” என அணிந்துரை வழங்கியுள்ளார் தமிழ் மரபு பண்பாட்டு ஆர்வலர் முனைவர் க. சுபாஷிணி.

நூல் குறிப்பு:
நூல்: பெண் பூப்பின் புனித வழிபாடு
பிரிவு: சமூகப் பண்பாட்டு ஆய்வு நூல்
வரிசை: 9
ஆசிரியர்: முனைவர் செ. இராஜேஸ்வரி
பதிப்பகம்: சந்திரோதயம், மதுரை
ஆண்டு: 2022 வெளியீடு

தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,

நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2022/03/Penn-Puuppu-Book.pdf

நன்றி.

அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like