THFi Announcement – E-books update: ஆங்கில மொழிபெயர்ப்பில் சங்கத் தமிழ்ப் பாடல்கள்
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று …
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வரிசையில் – ஐங்குறுநூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகிய சங்கத் தமிழ்ப் பாடல்கள் 3 மின்னூல்களாக இணைகின்றன. நூல்களுக்கு அறிமுகவுரை வழங்கியுள்ளார் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன்.
நூலாசிரியர் முனைவர்.செ. இராஜேஸ்வரி மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றுள்ள இவர் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நூல்களை சமூகப் பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு, புனைவிலக்கியம், திறனாய்வுகள், முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு என்று பல பிரிவுகளில் எழுதியுள்ளார்.
நூல் குறிப்பு:
நூல்கள்:
[1] Ainkurunuru (Selected Poems of Love) in English
[2] Kuruntokai (Selected Poems of Love) in English
[3] Purananuru (Selected Short Poems) in English
பிரிவு: சங்கத் தமிழ்ப் பாடல்கள் – ஆங்கில மொழிபெயர்ப்பு வரிசை
ஆசிரியர்: முனைவர் செ. இராஜேஸ்வரி
பதிப்பகம்: சந்திரோதயம், மதுரை
ஆண்டு: 2022 வெளியீடு
தனது நூல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று இணையும்
நூல்களை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
Sangam Classics in English Series:
[1] Ainkurunuru (Selected Poems of Love) in English
ஐங்குறுநூறு பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2022/03/Ainkurunuru-Book.pdf
[2] Kuruntokai (Selected Poems of Love) in English
குறுந்தொகை பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2022/03/Kurunthokai-Book.pdf
[3] Purananuru (Selected Short Poems) in English
புறநானூறு பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2022/03/Purananuuru-Book.pdf
நன்றி.
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை
www.tamilheritage.org