Home Events தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி: பயிலரங்கம் 

தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி: பயிலரங்கம் 

by admin
0 comment

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால்,  ‘தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி: பயிலரங்கம்’   ஒன்று  ஆகஸ்ட்  6ஆம் தேதி, 2022 சனிக்கிழமை,  மலேசிய நேரம் மதியம் 4 மணிக்கு ஜூம் இணையம் வழியாக நடத்தப் பட்டது.   இப்பயிலரங்கில் 90 மாணவர்கள் பங்கேற்றனர்.  
இப்பயிலரங்கினை கடிகை பொறுப்பாளர் டாக்டர்.பாமா மற்றும் மலேசிய நிபோங் திபால் தேசிய தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் டாக்டர்.சங்கர் மற்றும் திரு.நாணா ஆகியோர்  ஏற்பாடுகளை முன்னெடுத்து ஒருங்கிணைத்தனர். 

இளம் வயதிலேயே முறையாக வரலாற்றை பயிலாததால் தான் இன்றைக்கு கற்பனை செய்திகளையெல்லாம் உண்மை என நினைத்து வரலாறு அறியாத சூழல் நிலவுகிறது.
இந்தப் பயிலரங்கினால் மாணவர்கள் நிச்சயம் தேடுதலையும் வாசிப்பையும் வளர்த்துக் கொள்வர். முறையான வரலாற்றையும் அறிந்து கொண்டவர்களாகப் பிறருக்கும் தாங்கள் அறிந்து கொண்ட செய்திகளைச் சொல்லி அறிவார்ந்த சமூகம் வளர தங்கள் பங்களிப்பைச் செலுத்துவார்கள் என  உறுதியாக நம்புகிறோம் 

You may also like