Home Events உலக சுற்றுலா நாள் மரபு நடை

உலக சுற்றுலா நாள் மரபு நடை

by admin
0 comment

உலக சுற்றுலா நாள் 2022 முன்னிட்டு,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அருங்காட்சியகம் மற்றும் மரபு நடை குழுவால்,  சனிக்கிழமை அக்டோபர் 1ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை மரபு நடை ஏற்பாடு செய்யப்பட்டது.  மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வழிபாட்டுத் தலங்களில் வரலாற்றை தேடும் முயற்சியாக இன்றைய மரபு பயணம் அமைகிறது.

மரபு நடை நடை-வடசென்னை இடங்கள்:

  • மஸ்ஜித் இ மாமூர்(அங்கப்ப நாயக்கன் தெரு)
  • காளிகாம்பாள் கோயில் (தம்பு செட்டி சாலை)
  • ஆர்மீனியன் தேவாலயம் (அரண்மனைக்காரன் தெரு)

மஸ்ஜித் இ மாமூர்(அங்கப்ப நாயக்கன் தெரு):
தமிழ் மரபு அறக்கட்டளையின் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அங்கப்ப நாயக்கன் தெரு, மஸ்ஜித் இ மாமூர் தர்காவில் மரபு பயணம் தொடங்கியது.

ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் (தம்பு செட்டி சாலை):
மராட்டிய மன்னன் வீரசிவாஜி 3.10.1677ல் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்திருக்கின்றார். இந்தக் கோயிலின் பரிவார தெய்வம் கடல் கன்னி என்ற செய்தியும் கிடைக்கிறது.

ஆர்மீனியன் தேவாலயம் (அரண்மனைக்காரன் தெரு):
அரண்மனைக்காரன் தெரு என இன்று அழைக்கப்படும் ஆர்மேனியன் தெருவில் அமைந்திருக்கும் ஆர்மீனியன் தேவாலயத்தில் தற்சமயம் தேவாலயத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தேவாலயத்தில் 350க்கும் குறையாத மெட்ராஸ் நகரில் வந்து வாழ்ந்த ஆர்மீனிய முக்கியஸ்தர்களின் பூத உடல் புதைக்கப்பட்ட நினைவிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவாலயத்தில் உள்ளே நுழைந்தால் தனி உலகத்திற்கு வந்தது போன்ற ஒரு அனுபவம் கிட்டுகிறது.


You may also like