Home Events அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபின் கூத்துக் கலைகள்

அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபின் கூத்துக் கலைகள்

by admin
0 comment

அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபின் கூத்துக் கலைகள்

தமிழ் மரபின் வளங்களாக நாம் கருதுவனவற்றுள் கூத்துக் கலைகள் சிறப்பிடம் பெறுபவை. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருக்கூத்து நாடகங்களாக நடத்தப்படும் கூத்துக் கலைகள் அந்தந்த பகுதிகளில் வழங்கப்படும் நாட்டுப்புற வாய்மொழி இலக்கியங்களை மையமாகக் கொண்டும் அங்கு முக்கியமாக வழங்கப்படும் இலக்கியங்களைக் கொண்டும் வடிவமைக்கப்படுகின்றன.

கூத்துக் கலைகள் எனும் போது கலைஞர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் மற்றும் அவர்களது அலங்காரங்கள் பார்வையாளர்களை ஈர்க்கத்தக்க வகையில் அமையக்கூடியவை.

ஜெர்மனி லண்டன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு மாத கால அகம் புறம் கண்காட்சியில் ஒரு தனிப் பகுதி கூத்துக்கலையைச் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே புகைப்படத்தில் நாம் காண்பது அத்தகைய ஒரு கூத்துக்கலை வடிவம் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பகுதியாகும்.

முனைவர் க.சுபாஷினி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like