சைவமும் வைணவமும் தமிழ் நிலத்தின் முக்கிய சமயங்களாகத் திகழ்கின்றன. தமிழக பக்தி இயக்கத்தின் தாக்கம், அவற்றின் வெளிப்பாடாக வெளிவந்த சமய இலக்கியங்கள் ஆகியவையும் தமிழக பண்பாடு, வரலாறு, மொழி ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் கடந்த அக்டோபர் 8, 2022 அன்று தொடங்கப்பட்ட அகம் புறம் கண்காட்சியில் சைவ, வைணவ சமயங்கள் சார்ந்த அரும்பொருட்கள் இடம்பெறுகின்றன.
சோழர்கால செப்புத் திருமேனிகளும் கற்சிலைகளும் கண்களைக் கவர்கின்றன. இந்துக் கோயில் ஒன்றை முழுமையாக அருங்காட்சியக வளாகத்தின் உள்ளே ஏற்படுத்தி அதில் லிங்கத்தை வைத்து முதல் நாள் அதற்கு ஸ்டுட்கார்ட் கோயிலிலிருந்து பொறுப்பாளர்கள் வந்து பூசை செய்து வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மக்களின் கிராமப்புற வழிபாட்டுக் கூறுகளும் அவற்றின் ஓர் அங்கமான சுடுமண் உருவ பொம்மைகளும் கண்காட்சிக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
முனைவர் க.சுபாஷினி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு