திருவொற்றியூர் கல்விச்சுற்றுலா காணொளிகள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திருவொற்றியூர் கல்விச்சுற்றுலா பிப்ரவரி 20, 2022 மதியம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வரலாற்று ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கோயில் தொடர்பான செய்திகளை தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்கள் விளக்கமளித்தார்கள். அவருடன் துணையாக முனைவர் சசிகலா அவர்களும் வரலாற்றுச் செய்திகளையும் கல்வெட்டுச் செய்திகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய திருவொற்றியூர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி.
கோயில் என்பது வழிபாட்டிற்கு மட்டுமே என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு திருவொற்றியூர் கோயில் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தங்கியிருக்கும் ஒரு வரலாற்று ஆவணப் பாதுகாப்பகம் என்ற சிந்தனையை நேற்றைய கல்விச் சுற்றுலா வழங்கியது. இத்தகைய எண்ணற்ற கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை முறையாக அறிந்து கொள்வதும் அவற்றைப் பாதுகாப்பது அவசியமாகும்.
திருவொற்றியூர் கல்விச்சுற்றுலா காணொளிகள்
— தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஆ.பத்மாவதி
1: கோயில் வரலாற்றுச் செய்திகள்
https://youtu.be/dZ3xWMb-kTc
2: கல்வெட்டுச் செய்திகள்
https://youtu.be/sF6M7IP6mNc
3: படம்பக்க நாதர் வரலாறு
https://youtu.be/n0Fnt0vzFFs