Home E-Books THFi Announcement – E-books update:திரு. ப.யோ. தங்கசுவாமி அவர்களின் ‘நட்டாத்தியர்‌ வரலாறு’ (1984) நூல்

THFi Announcement – E-books update:திரு. ப.யோ. தங்கசுவாமி அவர்களின் ‘நட்டாத்தியர்‌ வரலாறு’ (1984) நூல்

by admin
0 comment

THFi Announcement – E-books update:
திரு. ப.யோ. தங்கசுவாமி அவர்களின் ‘நட்டாத்தியர்‌ வரலாறு’ (1984) நூல்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூலகத்தின் நூல்கள் வரிசையில் திரு. ப.யோ. தங்கசுவாமி அவர்கள் எழுதிய ‘நட்டாத்தியர்‌ வரலாறு’ (1984) நூல் இன்று இணைகிறது.

நூல்:
நட்டாத்தியர்‌ வரலாறு (1984)
ப.யோ. தங்கசுவாமி

Natathiyar Varalaru by Thangaswamy (1984) -THFi EBOOK
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2022/11/Natathiyar-Varalaru-by-Thangaswamy-THFi-EBOOK.pdf

மின்னூலாக்கம் உதவி:
முனைவர் பெ.சந்திர போஸ்

நட்டாத்தி நாடார்களின் பரம்பரை வரலாற்றினை, சேர சோழ பாண்டிய மன்னர்களிடம் தொடங்கி இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இதற்கு ஆதாரமாகக் கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகியவற்றைக் காட்டுகிறார். இந்த நூலாசிரியர் திரு. ப.யோ. தங்கசுவாமி இப்பிரிவைச் சேர்ந்தவர். 102 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர். காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், ஆய்வு மேற்கொண்டு ஒரு சிறந்த ஆய்வாளருக்கான இயல்புடன் தகவல்களை இந்நூலில் தந்துள்ளார்.

இவர்களின் திருமண நிகழ்வினை எப்படி நடத்தி வந்தனர், அப்போது பாடப்பட்ட பாடல்கள் எவை என்ற ஆய்வில் ஈடுபட்ட முனைவர் பெ.சந்திரபோஸ் அவர்கள் இந்நூலாசிரியர் குடும்பத்தினை அணுகி அனுமதி பெற்று நூலை மின்னூலாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளை மின் நூலகத்திற்காக வழங்கியுள்ளார், அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.

இந்நூல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிரிவினர் குறித்தும், அவர்களைத் தமிழ் மன்னர்களின் வழி வந்தவர்கள் எனக் கூறுவதாலும், ஓர் இனத்தின் மரபினைக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பதால், ஒரு தனிப்பட்ட சாதி குழுவினர் மன்னர்கள் வழி வந்தவர்கள் என்ற வரலாற்றைக் கூறும் ஒரு நூலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளை மின் நூலகத்தில் இணைக்கப்படுகின்றது. இதைத் தவிர்த்து தமிழ் மரபு அறக்கட்டளை இந்த நூல் சொல்லும் கருத்துக்களுடன் உடன்படுவதோ அல்லது இதனைப் பிரச்சாரம் செய்வதோ தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம் கிடையாது.

நன்றி.

தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நவம்பர் 27, 2022

You may also like