இன்றைய தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பயிலரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
215 மாணவர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இன்றைய காலை நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையிலிருந்தது என்பதை அவர்களிடம் உரையாடிய போது கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.

மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்வி கேட்டு தமிழ் வரலாற்றை அறிந்து கொள்ள காட்டிய ஆர்வம் தனிப்பட்ட வகையில் எனக்கு மன நிறைவு அளிப்பதாக அமைந்தது.
மாணவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கும் குறிப்பாக முனைவர் சங்கர் மற்றும் திரு கார்த்திக் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும்.
முனைவர் க. சுபாஷிணி