மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியக வரலாற்று உலா — தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அருங்காட்சியகம், கண்காட்சிப் பிரிவின் முன்னெடுப்பில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம் – பார்வையிடலும் விளக்கவுரையும் நிகழ்ச்சி என முனைவர். சுபாஷிணி ஒருங்கிணைப்பில் 17-12-2022, சனிக்கிழமை அன்று மதியம் 1:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மதுரை அரசுப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றார்கள்.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியக வரலாற்று உலாவில் பங்கேற்க 50க்கும் மேற்பட்ட சிறார்களும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மதுரை நாயக்கர் மஹால் வளாகத்தில் கூடினர். மாணவர்களுக்கு அரண்மனை மற்றும் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் விளக்கிய போது பேராவலுடன் ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள்; கேள்விகள் கேட்டார்கள். மாணவர்களுக்கு அருங்காட்சியகம் செல்ல வேண்டும் அரும்பொருட்களைக் கண்டு அவற்றைப்பற்றி ஆராய வேண்டும், குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் வலியுறுத்தினோம்.
எங்களோடு தமிழக தொல்லியல் துறையின் கீழடி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வாளர் காவியா அவர்களும் இணைந்து கொண்டு மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விளக்கம் அளித்தார். தமிழக தொல்லியல் துறைக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. இந்த அருங்காட்சியக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்கள்.
“தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு”
வரலாற்றைச் சிதைக்காதீர்கள்!!
மதுரை திருமலை நாயக்கர் மகால் வரலாற்று உலா
பள்ளி மாணவர்களின் கருத்து
https://youtu.be/BQjcBxukX6o
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை — பன்னாட்டு அமைப்பு