தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தமிழ்நாடு சென்னை, பச்சையப்பன் கல்லூரியும் இணைந்து நிறைவேற்ற இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு இன்று (ஜனவரி 20, 2023) காலை பச்சையப்பா கல்லூரி வளாகத்தில் இனிதே நடந்தேறியது.பச்சையப்பா கல்லூரி தமிழ்த் துறை மாணவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகளாவிய அமைப்பு பல்வேறு மேம்பாடு நடவடிக்கைகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி வழங்கத் திட்டமிட்டு வருகின்றோம்.
வறுமையான சூழலில் இருந்து வந்து கல்வி கற்கும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பம் கணினி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வரலாற்று விழிப்புணர்வு ஆகிய துறைகளிலும் தகவல்களைப் பெறவும் பச்சையப்பா கல்லூரியில் ஒரு கல்லூரி அருங்காட்சியகத்தை அமைக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் வகையில் அமைத்திருக்கின்றோம்.
முனைவர் க.சுபாஷிணி,
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்