Home Events பேட்ரீசியன் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பேட்ரீசியன் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும், சென்னை அடையாறு பகுதியில் உள்ள பேட்ரீசியன் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்ட சிறப்பு நிகழ்ச்சி இன்று ஜனவரி 24, 2023 நடைபெற்றது. மாணவர்களுக்கான வரலாற்று விளக்கப் பயணங்கள், கண்காட்சிகள், வரலாற்றுக் கருத்தரங்கங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


கல்லூரியின் பேராசிரியர்கள் வரலாற்று பாதுகாப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்பதும், கல்லூரி முதல்வர் இயக்குநர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் தமிழ்த் துறைத் தலைவர் சகோதரர் ராஜசேகரன் மற்றும் மாணவர்கள் காட்டிய பேரார்வமும் மகிழ்ச்சி அளிக்கிறது.கல்லூரி நிர்வாகத்தினர் பேராசிரியர்கள், முதல்வர், இயக்குநர் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நல்வாழ்த்துக்கள். பேட்ரீசியன் கல்லூரியில் வரலாற்று பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு என்பது குறித்து ஒரு உரையாற்றினேன்.

முனைவர் க.சுபாஷிணி,
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

You may also like