**தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு**
தரங்கம்பாடி சீகன்பால்க் பள்ளி, அச்சு இயந்திரம்
1706 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டிலிருந்து தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த பார்த்தலோமஸ் சீகன்பால்க் தமிழ் மண்ணுக்கு வந்த பிறகு தன்னை ஒரு தமிழ் மாணவனாக மாற்றிக் கொண்டார். இரண்டே ஆண்டுகளில் தீவிரமாகத் தமிழைக் கற்று 1710 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் பள்ளியை உருவாக்கினார். அதே ஆண்டு அவர் உருவாக்கிய அச்சகத்திற்கு இங்கிலாந்தில் இருந்து அச்சு இயந்திரம் வந்து சேர்ந்தது. இதில் தான் தமிழில் முதல் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு பைபிள் அச்சு நூல்களாக வெளிவந்தன.
தனது 36 வயதிற்குள் தமிழ் ஜெர்மன் மற்றும் இலத்தின் இலக்கண நூல்கள், தமிழ் நாட்டில் தான் சந்தித்த பண்பாட்டு மற்றும் வழிபாட்டுத் தகவல் களஞ்சியம் என குறிப்பிடத்தக்க இலக்கண இலக்கியப் படைப்புகளை வழங்கிய ஐரோப்பியத் தமிழ் அறிஞர். இவர் பயன்படுத்திய மேசை, தமிழ் அறிஞர் சீகன்பால்க் மற்றும் 1803ம் ஆண்டு திருக்குறளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்த காமரர் கல்லறை ஆகியனவற்றை தரங்கம்பாடியில் காணலாம்.
தரங்கம்பாடி சீகன்பால்க் பள்ளி, அச்சு இயந்திரம்காணொளி:
மார்ச் 3, 2023