Home Events மரபுப்பயணம் – கீழடி அருங்காட்சியகம்

மரபுப்பயணம் – கீழடி அருங்காட்சியகம்

by admin
0 comment

கீழடி அருங்காட்சியகத்திற்கு ஏப்ரல் 29, 2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் மரபுப் பயணம் மேற்கொண்டனர்.

கீழடி அருங்காட்சியகம் ஒரு பிரம்மாண்டம்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கொடுமணல், ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, அழகன் குளம் போன்றவை. இப்பகுதிகளிலும் கீழடி அருங்காட்சியகம் போல சைட் மியூசியம் என்று சொல்லப்படுகின்ற அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு கீழடி அருங்காட்சியகம் ஒரு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக, முன் உதாரணமாக அமைகிறது என்றே நான் கருதுகிறேன்.இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய தமிழக அரசு மற்றும் தமிழக தொல்லியல் துறைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

முனைவர் க. சுபாஷிணி

தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like