அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன் பதவி ஏற்றுக்கொண்ட இனிய தோழர் மாண்புமிகு திரு. செந்தில் தொண்டமான் அவர்களது இனிய அழைப்பின் பேரில் நேற்று கிழக்கு மாகாணப் பகுதிக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையினர் சென்றிருந்தோம்.
ஆளுநர் அவர்களைப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்து தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் அனைத்து நூல்களையும் வழங்கினோம். இந்நூல்களை உடனே அவர் தனது அலுவலக புத்தக அலமாரியில் காட்சிக்கு வைத்தது மகிழ்ச்சியான தருணம்.
கடின உழைப்பாளி; மக்களின் தேவையறிந்து பணியாற்றி வரும் ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் செயலாற்றிய மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
கிழக்கு மாகாணத்தில் தொழில்துறை, கல்வி, சமூகம், பண்பாடு, பொருளாதாரம் என அனைத்து கோணங்களிலும் துரித மேம்பாட்டைக் கொண்டு வர வேண்டும் எனத் தனது பணியைத் தொடங்கி இருக்கும் மாண்புமிகு ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் இனிய நல்வாழ்த்துக்கள்.
முனைவர் க. சுபாஷிணி,
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
24.5.2023