மே 29 2023 அன்று காலை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சாமிநாதன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போது தமிழ் வளர்ச்சி குறித்த கருத்துகளை தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் மாண்புமிகு அமைச்சருடன் பகிர்ந்து கொண்டனர்.

அமைச்சர் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் அண்மைய வெளியீடான நிலவியல் நோக்கில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நூலைப் பரிசளித்து மகிழ்ந்தோம்.
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு