Home Magazine “திணை” இதழ் 32 [ஏப்ரல் — 2023] காலாண்டிதழ் வெளியீடு

“திணை” இதழ் 32 [ஏப்ரல் — 2023] காலாண்டிதழ் வெளியீடு

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் — “திணை” இதழ் 32 [ஏப்ரல் — 2023] காலாண்டிதழ் வெளியீடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“திணை”.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.

காலாண்டிதழ் வரிசையில் இந்த 32ஆவது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
“திணை” இதழ் 32 [ஏப்ரல் — 2023]

காலாண்டிதழை இணையம் வழி படிக்க:
தமிழ் மரபு அறக்கட்டளை தளத்தில்

http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2023/06/Thinai-32.pdf

ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர் : குமரன் சுப்ரமணியன்

வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

உள்ளடக்கம்

தலையங்கம்
— முனைவர் க. சுபாஷிணி

கடலும் தமிழும்! சங்க இலக்கியக் கருத்தியல்கள்
— ஆர்.பாலகிருஷ்ணன்

அன்பின் ஐந்திணை – நெய்தல்
— முனைவர் தேமொழி

அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: நூல் திறனாய்வு
— முனைவர் க. சுபாஷிணி

“வைக்கம் நூற்றாண்டு”
— முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி

தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்வுகள்
— ஜனவரி 1, 2023 — மார்ச் 31, 2023

முன்னட்டையில்: 2023 மார்ச் 5 அன்று திறக்கப்பட்ட கீழடி அகழ்வைப்பகம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தலையங்கம்

— முனைவர் க. சுபாஷிணி

suba.png

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஆகஸ்ட் மாதம் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலம் முதல் தொடர்ச்சியாகத் தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை உலகத் தமிழர்கள் அறிந்திருப்பீர்கள்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆய்வுக் காலாண்டிதழான ‘மின்தமிழ்மேடை’ ஆய்விதழ் தொடங்கப்பட்டது. இந்த இதழ் கடந்த  2022 ஆண்டு அக்டோபர் மாதம் வரை 31 இதழ்களாக ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடப்பட்டு கூகுள் புக்ஸ் தளத்திலும் இலவசமாக ஆய்வாளர்களுக்குப்  பயன் தரும் வகையில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது [பார்க்க: THFi தளத்தில்: https://thf-news.tamilheritage.org/category/mintamilmedai/  :  கூகுள் புக்ஸ் தளத்தில்: https://tinyurl.com/GoogleBooks-MinTamilMedai]

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ‘திணை’ என்ற பெயரில் திங்களிதழாக செய்தி மடல் ஒன்றினை தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிடத் தொடங்கினோம். கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதி வரை 31 மடல்களாக ஒவ்வொரு மாதமும் இந்தச் செய்தி மடல் தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகள், வெளியீடுகள், ஆய்வுகள் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்தது [பார்க்க: https://thf-news.tamilheritage.org/category/thinai/].

இவ்வாண்டு தொடக்கம் முதல் இந்த இரண்டு வெளியீடுகளையும் ஒன்றிணைத்து அதாவது மின்தமிழ் மேடை ஆய்வுக்காலாண்டிதழையும் திணை மாதாந்திர செய்தி மடலையும் ஒன்றிணைத்து புதிய வடிவில் திணை காலாண்டிதழை தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடுகின்றோம் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றோம்.

புதிய வடிவில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி என்ற வகையில் இக்காலாண்டிதழ் வெளிவர உள்ளது. இந்த இதழ் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களால் எழுதப்பட்ட படைப்புகளைத் தாங்கியும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் வெளிவர உள்ளது. அந்த வகையில் மூன்று மாதங்கள் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவும் இந்த காலாண்டிதழ் விளங்கும்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்கும் அதன் செயல்பாடுகளைத் தொடர்வதற்கும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த காலாண்டிதழை வாசித்துப் பயன்பெறலாம்.

திணை காலாண்டிதழின் பொறுப்பாசிரியராக முனைவர் தேமொழியும், இணைப் பொறுப்பாசிரியராக திரு குமரன் சுப்ரமணியமும் செயல்படுவார்கள். அவர்கள் இருவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வரலாற்று ஆய்வுகள் மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டோர் நீங்களும் இணையலாம்.

வாருங்கள்.. தமிழால் இணைவோம்!

 அன்புடன்

முனைவர் க சுபாஷினி

தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

You may also like