ஆகஸ்ட் 15, 2023 விடுதலை நாளை முன்னிட்டு தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளை – மதுரை கிளையின் முன்னெடுப்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு மரபு விளையாட்டுக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முனைவர் ஆ. பாப்பா , முனைவர் இறைவாணி , மு.சுலைகா பானு, ஆசிரியை தாமரைச் செல்வி, ஆசிரியர் சரவணக்குமார், பா. முத்துக் குமார், சு. சூர்யா என மதுரைக் கிளை உறுப்பினர்கள் நிகழ்ச்சியைத் திறம்பட நடத்தினர்.
சிறப்பான ஒருங்கிணைப்பினைச் செய்து நிகழ்ச்சியை மாணவர்களுக்கும் வந்திருந்த ஏனையோருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்திய தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை கிளையினரின் மதுரை கிளை பொறுப்பாளர் ஆசிரியை சுலைகா பானுவுக்கும், மதுரை த.ம.அ குழுவினருக்கும் மாணவச் செல்வங்களும் எனது அன்பும் வாழ்த்துகளும்.
டாக்டர்.க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி.
நிகழ்ச்சி குறித்து நாளிதழ் செய்திகள்: