தமிழி கல்வெட்டு எழுத்து மற்றும் வாசிப்புப் பயிலரங்கம்
வரலாற்றில் ஆர்வம் கொண்டு கல்வெட்டுகளைப் படிக்க விரும்புபவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எளிமையாக வரலாற்றையும் கல்வெட்டு எழுத்துக்களையும் அறிமுகப்படுத்த, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை முதன்மை நிலை இணையக் கல்விக் கழகம் 3 மணி நேரத் தமிழி கல்வெட்டுப் பயிற்சியினை நவம்பர் 18 ஆம் நாள் இணையவழி தமிழி கல்வெட்டு எழுத்து மற்றும் வாசிப்புப் பயிலரங்கம் நடத்தியது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி அவர்களும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் அவர்களும் வரலாற்றில் கல்வெட்டுகள் மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்துப் பயிற்றுவித்தார்கள்.