ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேலூர் மாவட்டம் ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியும் தமிழ் மரபு பன்னாட்டு அமைப்பும் இணைந்து மாணவர்களுக்குத் தமிழ், வரலாறு, ஆய்வுத் துறைகளில் பயிற்சி அளிக்க ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டது.
இத்திட்டம் குறித்து நவம்பர் 19, 2023 ஆண்டு ஓர் இணையவழி கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆக்சிலியம் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சகோதரி ஜெயசீலி அவர்களும், கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில் கீழ்க்காணும் நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டன:
• புரிந்துணர்வு ஒப்பந்தம்
• டிசம்பர் 8, 2023 அன்று கல்லூரியில் சுவலி தொடர்பான ஒரு நேரடி பயிற்சி
• சுவலி திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பு
• நம் ஊர் நம் வரலாறு – டிஜிட்டல் வேலூர் திட்டம்
• திசைக்கூடல் உரைகளில் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்வர்
• கல்லூரி அருங்காட்சியகம் உருவாக்குதல்
• இயற்கை, விலங்குகள் ஏனைய உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்