யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு நவம்பர் 19, 2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை முதன்மை நிலை இணையவழி கல்விக்கழகம் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைப் பிரிவு சார்பில் “வரலாற்று ஆய்வில் களப்பணிகள்” என்ற இணையவழிப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் அ. சாந்தினி அவர்களின் ஒருங்கிணைப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்குபெற்றனர். தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் க. சுபாஷிணி அவர்கள் களப்பணிகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியை தமிழ்மரபு அறக்கட்டளையின் கடிகை பிரிவின் பொறுப்பாளர் முனைவர் பாமா அவர்களும் ஜெர்மனி உறுப்பினர் திரு. குமரன் சுப்ரமணியன் அவர்களும் வழிநடத்தினர். பயிற்றுவித்த முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கும், பங்கு பெற்ற மாணவர்களுக்கும், ஒருங்கிணைத்த துறைத் தலைவர் முனைவர் அ. சாந்தினி அவர்களுக்கும், நிகழ்ச்சியை வழிநடத்திய முனைவர் பாமா மற்றும் குமரன் சுப்ரமணியன் அவர்களுக்கும் பாராட்டும் நன்றியும்.