Home Books துரை சுந்தரத்தின் கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் நூலறிமுகம்

துரை சுந்தரத்தின் கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் நூலறிமுகம்

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை வழங்கும் . . .
ஜனவரி மாத நூல் அறிமுகம்
கல்வெட்டு ஆய்வாளர் துரை சுந்தரம்
அவர்களின் . . .
கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்
நூல் அறிமுகம், கலந்துரையாடல்
நூலறிமுகம் செய்பவர்
திருமிகு அ. ஷீலா

ஆசிரியை கூடக்கோயில் நாடார்கள் மேல் நிலைப் பள்ளி
காணொளி: https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1976484769413462

ஜனவரி 25, 2024  அன்று நடைபெற்ற நூலறிமுகம் நிகழ்ச்சி மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் குழந்தைகளிடம் நூல் அறிமுகம் செய்தது சிறப்பு. குழந்தைகளுக்கு ஏற்றாற் போல் ஆசிரியை வசந்தி அவர்களும் சமூக ஆர்வலர் ஷீலா அவர்களும் பேசியது பயனுள்ளதாக இருந்தது.நூல் அறிமுகத்தைக் கதை வடிவில் கலந்துரையாடலாக நிகழ்த்தினார். அலங்கியம் என்ற ஊரில் ஆங்கிலத்தில் உள்ள கல்வெட்டு ,மருத்துவம் சார்ந்த கல்வெட்டு, புலிக்குத்திக் கல்வெட்டு, சுமைதாங்கி கல், இருவாச்சி கல், ஆநிரை கவர்தல் போன்ற செய்திகள் மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் புதியதாக இருந்தது. வரலாற்றைத் தேடவேண்டும் படிக்க வேண்டும் என்னும் ஆர்வம் எழுந்ததைப் பார்க்க முடிந்தது.


தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக்கிளை  பொறுப்பாளர்  சுலைகாபானு அவர்கள் செய்த பணிகள் செய்ய வேண்டிய பணிகள் வேர்களைத் தேடி என்ற பயணம்.  அதற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் சுபாஷிணி அவர்களின் குழுவினரையும் அறிமுகப்படுத்தினார். நான்காவது நூலறிமுகம் கொங்கு நாட்டில் ஆரம்பித்து கீழடி அகழாய்வு முக்கியத்துவம் வரை பேசி கலந்துரையாடலை ஆரம்பித்து விட்டார். சுகன் என்ற சிலம்ப வீரர் கேட்ட கேள்வியும் அவரால் பாதுகாக்கப்பட்ட சிறிய கல் மற்றும் பதக்கத்தை ஆராய உள்ளேன் என்றார். மேலும் அவரே சக்கரம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பதை மலையிலிருந்து உருண்ட கல்லைப் பார்த்து யோசனை வந்தது என்றார்.  நன்றியுரை கூறிய தங்கமீனா மாநில அளவில் ஹாக்கிப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மாணவர்களிடையே வரலாற்றைக் கொண்டு செல்வது தான் மிகச்சிறந்த ஒரு செயல்பாடு.
திரு. சேகர், மதுரை 25.01.2024 


You may also like