தமிழ்மரபு அறக்கட்டளை – மதுரைக் கிளையின்
கல்வெட்டியல் – தொல்லியல் பயிலரங்கம்
“இராஜேந்திர சோழனின் கல்வெட்டுக்கள்
ஒரு சிறப்புப் பார்வை”
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசினர்
மகளிர் கலைக் கல்லூரி
முனைவர் ஆ.துளசேந்திரன்
கல்வெட்டியல் மற்றும்
தொல்லியல் துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம்
26.1. 2024 – வெள்ளிக்கிழமை, காலை 10 – 12 மணி
இடம்: தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைக் கிளையின் சார்பாகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம் தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜே .ஆர். சிவராமகிருஷ்ணன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் துளசேந்திரன் அவர்களும் ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள். தொல்லியல் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் அதற்கான படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள் .
முன்னதாக நிகழ்ச்சியின் வரவேற்பினைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு மூ. சந்திரன் அவர்கள் வழங்க, பயிலரங்க நோக்க உரையை நல்லாசிரியை திருமதி சுலைகா பானு அவர்கள் ஆற்றினார்கள். திரு மு. சேகர் அவர்கள் நன்றியுரை அளிக்க விழா இனிதே நிறைவுற்றது.
கல்வெட்டுப் பயிலரங்கினை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. சோழ மண்ணிலிருந்து பாண்டிய மண்ணிற்குப் பயணம் செய்து இன்முகத்துடன் பயிற்சியளித்த பேராசிரியர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நிகழ்ச்சியின் படங்கள் சில: