பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் வேர்களைத் தேடி எனும் தலைப்பில் பன்னாட்டு பயிலரங்கம் புதன்கிழமை பிப்ரவரி 21, 2024 அன்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இதில், கொரிய நாட்டுத் தமிழ் ஆய்வாளர் நா.கண்ணன், ‘கொரியா வரை செல்லும் தமிழ் வேர்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தஞ்சாவூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியரும், தமிழகத் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் சிவராமகிருஷ்ணன், ‘தமிழக அகழாய்வுகள் உணர்த்தும் தமிழரின் வாழ்வியல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
‘கடல் கடந்த தமிழ்’ என்ற தலைப்பில் ஜெர்மனியின் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில தலைமைக் கணினிப் பொறியாளராகப் பணியாற்றும் முனைவர் சுபாஷிணி உரையாற்றினார்.
கடல் கடந்த தமிழ்
-முனைவர்.க.சுபாஷிணி
https://youtu.be/Zf4JpJRFjgY
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் நாகரத்தினம், ஜெய்சிங், தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.