விழுப்புரம் பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம்:
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஏப்ரல் 6, 2024 (சனிக்கிழமை அன்று) விழுப்புரம் பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம் சிறப்புடன் நடந்தது.
பனை ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்படும் பனைத் திருவிழாவில் பங்கேற்று நமது மண்/மரபு சார்ந்த பனை குறித்த தகவல்கள் மற்றும் பல்வேறு பனை உற்பத்திப் பொருட்கள் குறித்து அறிவதற்காக மரபு மற்றும் வரலாற்று ஆர்வலர்கள்
- பனங்காட்டீஸ்வரர் கோவில்
- பனைமலை
- நரசிங்கனூர்
ஆகிய இடங்களுக்கு மரபுப் பயணம் மேற்கொண்டார்கள்.