Home Magazine தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 36 [ஏப்ரல் — 2024] வெளியீடு

தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 36 [ஏப்ரல் — 2024] வெளியீடு

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ்
தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 36 [ஏப்ரல் — 202] வெளியீடு

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் மின்னிதழ்…
தமிழ் மரபுத் திணை — 36 [ஏப்ரல் — 2024] இன்று வெளியீடு காண்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “தமிழ் மரபுத் திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “தமிழ் மரபுத் திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.

காலாண்டிதழ் வரிசையில் இந்த 36 ஆவது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 36 [ஏப்ரல் — 2024]

காலாண்டிதழை இணையம் வழி படிக்க:
தமிழ் மரபு அறக்கட்டளை தளத்தில்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2024/04/Thinai-36-April-2024-THFi.pdf

ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர் : குமரன் சுப்ரமணியன்

வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

உள்ளடக்கம்
_________________
தலையங்கம் 6
1. தமிழும் இசையும்:  இசை என்ற சொல்லின் ஆழமும் அகலமும் 9
2.  தமிழ்நாட்டின் வரலாற்றுப் பாதுகாப்பில் கலைஞர் 14
3.  கொடையளித்த அரசி 33
4.  தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அரசே நடத்திய தமிழ்ப் பள்ளிகள் இருந்தனவா? 40
5.  தொல்லியல் போலிகள்! 48
6. தமிழ்நடை பற்றிய என் எண்ணங்கள் 59
7. காலணிகளைக் கவினுற அமைத்தனர் 65
8. தவற்றைச் சுட்டிக்காட்டத் தவறிய தமிழாய்ந்த அறிஞர்கள் 71
9.  இந்திய மொழிகள் பேராயம்: காலத்தின் கட்டாயம் 86
10.  அறிவியல் அடிப்படையில் சீரமைக்கப்பட்ட தமிழ்  நாட்காட்டி 94
11.  பேரின்ப நினைப்பு நுட்ப ஓகம்  / ஆனந்த பாவனை தந்திர யோகம் 122
12.  நாளொற்றித் தேய்ந்த விரல் 139
13.  இளங்கோவடிகள் வழங்கிய 20 கட்டளைகள் 143
14.  மணிமேகலை காப்பியமும் தேவைக் கோட்பாடும் 150
15.  முதன்மைத் தமிழாசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 158
16.  கும்பகோணம் பாலாமணியின்  ” டம்பாச்சாரி விலாசம்” 162
17.  “நான் கலைஞனும் ஆனேன்” 166
18.  கடலுக்கு அப்பால்  – நூல் மதிப்புரை 169
19.  வாழ்ந்தவர்களுக்குப் பூவுண்டு நீருண்டு 175
20.  திணைக்கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும் – நூல் அறிமுகம் 182
21.  தமிழர் புலப்பெயர்வு – நூல் மதிப்புரை 184
22.  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 190
_____________________________________________________________________________________

வணக்கம்.

இக்காலாண்டிதழ் வழி உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழ்ச் சூழலில் இன்று நூல்கள் வாசிப்பு வளர்ச்சிகண்டு வருகின்றது.  இது மிக ஆரோக்கியமான ஒரு வளர்ச்சி. புதிய தமிழ் நூல்கள் பதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதன் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதற்குச் சான்றாக தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற புத்தகக் கண்காட்சிகள் பெரு நகரங்களில் மட்டுமல்லாது சிறுநகரங்களிலும் இன்று பரவி வருவதைப் பற்றிய செய்திகள் செய்தி ஊடகங்களில் வருவதைக் காண்கின்றோம். தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழ் நூல்களைப் பெறுவதற்கு இவ்வகையான கண்காட்சிகள் பேரளவில் உதவுகின்றன.

தமிழ் சிந்தனையில் உருவாக்கம் பெறுகின்ற நூல்கள் வேற்று மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது காலத்தின் கட்டாயம். ஆங்கிலம் மட்டுமன்றி ஐரோப்பிய மொழிகள், மத்தியக் கிழக்காசிய மொழிகள், அரேபிய மொழிகள், தென்கிழக்காசிய மொழிகளில் தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் போது சமகாலத் தமிழ் சூழ்நிலையை, தமிழ்ச் சிந்தனையை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழர் வரலாற்றை வேற்று மொழி பேசும் வேற்று இனத்தோர் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பை இது வழங்கும். மிக மெதுவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு என்பது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசின் அனைத்துலக புத்தகக் கண்காட்சி நிகழ்வின் காரணமாக மிகுந்த பாய்ச்சலுடன் வேகம் எடுத்து இயங்கத் தொடங்கி இருக்கின்றது என்பதைக் காண்கின்றோம். இது வரவேற்கத்தக்க ஒரு செயல்பாடாகும்.

தமிழ்நாடு மட்டுமன்றித் தமிழ் நூல்கள் கண்காட்சி அயல்நாடுகளில் செயல்படுத்தப்பட வேண்டியதன் தேவை இருக்கின்றது. தற்சமயம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் நூல்கள் கண்காட்சி, வருகின்ற காலங்களில் மேலும் விரிவாகச் செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. இதன் வழி அயல்நாடுகளில் வாழ்கின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமிழ் நூல்களைப் பெறவும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ச் சமூகம் தமிழ் நூல் வாசிப்பைக் கைவிடாது தொடரவும் இது வழிவகுக்கும்.

இந்தக் காலாண்டிதழ்  பல்வேறு தலைப்புகளில் அறிஞர்களது கட்டுரைகளைத் தாங்கி மலர்கின்றது. ஒவ்வொரு கட்டுரையும் முன்வைக்கின்ற கருத்துக்கள் தமிழ்ச்சமூகத்தின் சிந்தனைக்கு விருந்தாக அமையும். கட்டுரைகளோடு நூல் திறனாய்வுகளும் நூல்கள் பற்றிய செய்திகளும் இந்தக் காலாண்டிதழைச் சிறப்பிக்கின்றன.

விரிவான நூல் வாசிப்பும் தரமான ஆய்வு சிந்தனையும் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைப் போக்கிற்கு உரமாக அமையும். தொடர்ந்து வாசிப்போம் தமிழர் சிந்தனைக்கு வளம் சேர்ப்போம்!

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர் க சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like