தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைக் கிளையின் சார்பாக ஜூன் மாதம் நடைபெற்ற நூல் அறிமுகம் மற்றும் நூல் கொடை வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியில் முனைவர் ராஜேஸ்வரி அவர்கள் தலைமை உரை ஆற்ற, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷேக் நபி அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.
அடுத்ததாக 10, 11, 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த பள்ளி மாணவர்களுக்குப் பரிசாக முனைவர் ராஜேஸ்வரி அவர்கள் புத்தகங்கள் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய “ஏன்? எதற்கு ?எப்படி? எதனால் ?” என்று தொடங்கும், 5 தொகுதிகள் கொண்ட “நுண்பொருள் காண்பது அறிவு நூல் வரிசை” அறிவியல் நூல்கள் பள்ளிகளுக்குக் கொடையாக வழங்கப் பட்டது. திருமிகு மோசஸ் பாக்கியராஜ், திருமிகு வசந்தி, திருமிகு பாலச்சந்தர், திருமிகு சேகர், திருமிகு காட்வின், திருமிகு நாகரத்தினம், திருமிகு லிங்கேஸ்வரி மற்றும் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு ஷேக் நபி ஆகியவர்கள் தங்களின் பள்ளிகளின் சார்பாக நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து பட்டதாரி ஆசிரியை திருமிகு தாமரைச்செல்வி அவர்கள் முனைவர் தேமொழி அவர்களின் “வரலாற்றில் பொய்கள் ” என்ற நூலினை அறிமுகம் செய்து பேசினார்கள். இறுதியாக, திருமிகு செல்வம் ராமசாமி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ் இயக்கத் தலைவர் மற்றும் பொருளாளர் அவர்கள் கலந்து கொண்டு சிற்றுரையாற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். திருமிகு கணேஷ் பாண்டி அவர்கள் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் அடுத்த நிகழ்வினை அவருடைய மையத்தில் நடத்துமாறு கூறியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பினைச் செய்த அனைத்துத் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணைந்து பயணிப்போம் நன்றி.
திருமிகு சுலைகா பானு
தமிழ் மரபு அறக்கட்டளை
மதுரைக் கிளை பொறுப்பாளர்
பகுதி -1: நூல்கொடை
https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1000077501771660
பகுதி -2: நூல்மதிப்புரை
https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1444749703079823
நிகழ்ச்சியின் சில படங்கள் மற்றும் செய்திகள்: