நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நமது உடல்நலம் மற்றும் நோயின் அடிப்படையில் நாம் ஏன் வேறுபடுகிறோம்?
— முனைவர் கு. தங்கராஜ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை சிறப்பு நிகழ்ச்சி [ஜூன் 8, 2024]
https://www.youtube.com/watch?v=IwP5gI49Uxc
தமிழ் மொழி, தமிழர்கள் சார்ந்த ஆவணங்கள், தடயங்கள், தொன்மச் சின்னங்கள், வாய்மொழி இலக்கியங்கள் என்று நிறைய தகவல்கள் வரலாற்றுக் காலம் தொடர்ந்து கிடைக்கிறது. ஆனால் நம்முடைய மூதாதையர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் காலந்தோறும் நடக்கும் இனக்குழுக்களின் கலப்புகள் பற்றிய அறிய நாம் அறிவியலின் துணையை நாட வேண்டியுள்ளது.
முக்கியமாக மரபணுவியல் துறையில் இந்தியர்கள் யார், தமிழர்கள் யார் என்று கேள்விகளுக்கு அறிவியல் வழியான ஆய்வு முடிவுகள் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் நிறைய கிடைத்துள்ளது. இந்த அறிவியல் முடிவுகளை பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல மற்றும் தமிழ்ச் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த இணைய தளத்தில் மரபணுவியல் கருத்தரங்கு செய்யலாம் என்று செயற்குழு முடிவு செய்து கடந்த 2024 ஜூன் 8 ஆம் தேதி நடத்தினோம்.
இக்கருத்தரங்கில் ஐதராபாத்தில் உள்ள CCMB ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வரும் முனைவர் தங்கராஜ் ‘நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நமது உடல் நலம் மற்றும் நோயின் அடிப்படையில் நாம் ஏன் வேறு படுகிறோம் ?’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இணை-தோற்றுநர் முனைவர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை நோக்கவுரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கில் பங்கேற்க 182 நபர்கள் பதிவு செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் 115 கலந்து கொண்டு உரையின் முக்கிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட மட்டுமில்லாமல் நிறைய கேள்விகள் தொடுத்துப் பயன்பெற்றுக் கொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியை முனைவர் இந்துமதி செவ்வனே தொகுத்து வழங்கினார். திருமிகு சக்தி ஸ்ரீ, திருமிகு சுபிக்ஷா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் சான்றிதழ் தயாரித்தனர், வாட்ஸ்அப் குழுமத்தை திருமிகு சுபிக்ஷா, திருமிகு மணிவண்ணன் அழகே வழிநடத்தினர். ஜும் டெக்னிக்கல் சப்போர்ட்டை திருமிகு வருண் திருமிகு பானுரேகா நல்கினார்கள்.
இந்த நிகழ்ச்சி தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு முக்கிய மைல்களாக அமைந்தது என்பதில் எங்களுக்குப் பெருமிதம் அளிக்கிறது.
நன்றி
முனைவர் மு பாமா
கடிகைப் பொறுப்பாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு