தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
— ஏப்ரல் 1, 2024 — ஜூன் 30, 2024 வரையிலான நிகழ்வுகள்
தொடர்பான செயலரின் காலாண்டு அறிக்கை
சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள்:
1. சிறப்பு நிகழ்ச்சிகள்
அ. மே 11, 2024 ஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி ஐரோப்பியக் கிளையின் ஏற்பாட்டில்
(பொறுப்பாளர்கள்: திருமிகு.பூமா, திருமிகு பாரதி)
ஆ. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அருங்காட்சியகப் பிரிவு சிறப்பு நிகழ்ச்சி.
சர்வதேச அருங்காட்சியகத் தினம் மே 18, 2024, — இணையவழி சிறப்பு நிகழ்ச்சி
(அருங்காட்சியகக் குழு பொறுப்பாளர்கள்: திருமிகு. ப்ரீத்தி, திருமிகு. க்ரிஷ்)
2. சிறப்புக் கருத்தரங்க நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள்
அ. ஏப்ரல் 20 & 21-2024 அன்று
மட்டக்களப்பு வரலாறு-சமூகம்-பண்பாடு: இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம்
பூர்வகுடிகளின் சமூகம், வாழ்வியல், பண்பாடு போன்றவற்றை விளக்கும் தலைப்புகளில் உரைகள் பூர்வீக வரலாறு – வரலாற்றுத் தொடக்கக் காலம், பிற்கால வரலாறு முதல் சமகாலம் வரை விவரிக்கப்பட்டது.
(கருத்தரங்கப் பொறுப்பாளர்கள் : முனைவர்.க.சுபாஷிணி, முனைவர்.இறைவாணி, முனைவர். பாப்பா)
ஆ. ஜூன் 8, 2024 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை சிறப்பு நிகழ்ச்சி – மரபணுவியல் இணையவழி கருத்தரங்கம்
“நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நமது உடல்நலம் மற்றும் நோயின் அடிப்படையில் நாம் ஏன் வேறுபடுகிறோம்?”
— முனைவர் கு. தங்கராஜ் ஐதராபாத்- CCMB ஆய்வாளர்
அண்மைய மரபணு ஆய்வு முடிவுகள் குறித்து அறியத் தந்தார்
(கடிகைப் பொறுப்பாளர்கள்: முனைவர்.பாமா, முனைவர்.சுபா தேசிகன், கடிகை குழுவினர்)
3. இணையவழி திசைக்கூடல் நேரலைகள்
ஏப்ரல் 1, 2024 — ஜூன் 30, 2024
நிகழ்ச்சிகள் 355-360 வரை, மாதம் 2 என 6 நிகழ்ச்சிகள்
(கருத்தரங்கப் பொறுப்பாளர்கள் : முனைவர்.இறைவாணி, திரு.வருண்)
4. தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல் வெளியீடுகள்
அ. தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்
— ச. சிங்கநெஞ்சம்
ஆ. தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
— ச. சிங்கநெஞ்சம்
இ. வரலாற்று நிலவியல் நோக்கில் சிதம்பரம் நகரும் நகர்ப்புறமும்
— முனைவர் ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன்
(பதிப்பகப் பிரிவு பொறுப்பாளர்கள் : முனைவர். சுபாஷிணி, முனைவர்.தேமொழி, முனைவர்.பாப்பா, முனைவர்.இறைவாணி, திரு.அருணேஷ், திரு.மணி, திரு.நாணா)
5. தமிழ் மரபு அறக்கட்டளை மரபுக் காணொளி வெளியீடு
பினாங்கு இந்தியர் சங்கம் துணைத்தலைவர் திரு. சோமசுந்தரம் அவர்களை நேர்காணல் செய்யும் காணொளி மூலம் பினாங்கு இந்தியர் சங்கத்தின் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
6. வரலாறு அறியும் மரபுப் பயணம்
பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம்
• பனங்காட்டீஸ்வரர் கோவில்
• பனைமலை
• நரசிங்கனூர்
ஆகிய இடங்களுக்கு மரபுப் பயணம் மேற்கொண்டு
பனைத் திருவிழாவில் பங்கேற்று நமது மண்/மரபு சார்ந்த பனை குறித்த தகவல்கள் மற்றும் பல்வேறு பனை உற்பத்திப் பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள குழுவினருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.
(மரபுப் பயணக்குழு பொறுப்பாளர்: திரு.மணி, அருங்காட்சியகப் பொறுப்பாளர்கள்: க்ரிஷ், ப்ரீத்தி ஏற்பாட்டில் நிகழ்ந்தது.)
7. சுவலி — ஒலிநூல்கள்
அ. ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு-2, தொகுப்பு-3
ஆ. தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் – எழுதிய“பல்லவப்பேரரசர்”
(சுவலி பிரிவு பொறுப்பாளர்: திருமிகு. சிந்தியா ஒருங்கிணைப்பில் பவானி முரளிகிருஷ்ணா, ஸ்ரீதேவி ஒலிவடிவம் கொடுத்துள்ளார்கள்)
8. நூல் அறிமுகம் நிகழ்ச்சிகள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு , மதுரைக்கிளை
மதுரைக் கிளை பொறுப்பாளர் திருமிகு.சுலைகாபானு ஏற்பாட்டில்
அ. ஏப்ரல் மாத நூல் அறிமுகம் நிகழ்ச்சியில்
தேமொழியின் ”இலக்கிய மீளாய்வு”
நூல் அறிமுகம் : முனைவர் ச. மதிப்பிரியா
ஆ. ஜூன் மாத நூல் அறிமுகம் நிகழ்ச்சியில்
தேமொழியின் “வரலாற்றில் பொய்கள்”
நூல் அறிமுகம் : திருமிகு தாமரைச்செல்வி
இ. இந்நிகழ்ச்சியில் முனைவர்.தேமொழியின் 5 அறிவியல் நூல்கள் தொகுப்புகள் 12 மதுரைப் பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது ; (மதுரைக் கிளை பொறுப்பாளர்: நல்லாசிரியர் திருமிகு. சுலைகாபானு)
9. கல்விக் கொடைகள்
சுவிட்சர்லாந்து, பாசல் நகர தேசிய நூலகத்திற்குத் தமிழ் நூல்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் மே 30, 2024 அன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
(பொறுப்பாளர்: ஐரோப்பியக் கிளையின் திருமிகு.ரம்யா)
அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு