தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு—மதுரைக்கிளை ஏற்பாட்டில்
ஜூலை மாத நூல் அறிமுகம் மற்றும் நூல் கொடை பெறும் நிகழ்வு மிகச் சிறப்பாக ஜூலை 21, 2024 அன்று காலை நடைபெற்றது.
நிலா இலக்கிய மன்ற நிறுவனர் கவிக்குயில் இரா. கணேசன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்கள். மணியம்மை பள்ளியின் தாளாளர் திருமிகு வரதராஜன் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலையில் வகித்துச் சிறப்புச் செய்தார்கள்.
நிகழ்வில் அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் முத்துராஜ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.
திருமிகு சுப விஜய் ப்ரீத்தி அவர்கள் முனைவர் தேமொழி எழுதிய ‘தமிழகத்தில் பௌத்தம்’ என்ற நூலினை அறிமுகம் செய்தார்கள்.
நூல் அறிமுக நிகழ்ச்சி முடிந்ததும் நூல் கொடை நிகழ்வானது நடைபெற்றது. நிகழ்வில் செம்மலர் பத்திரிக்கை ஆசிரியர் சோழ நாகராஜன் அவர்கள், பாரதி இலக்கியப் பேரவைத் தலைவர் முருகன் மற்றும் செயலர் பாலா அவர்கள், திண்டுக்கல் ஆசிரியர் திரு. ஷாஜகான் அவர்கள், தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் திருமிகு சேகர் மற்றும் ஒளிப்படக் கலைஞர் திரு. செல்வம் ராமசாமி அவர்கள் மீனாட்சி கல்லூரியின் பேராசிரியர் கவிதா அவர்கள், எழுத்தாளர் ஆசிரியை வசந்தி அவர்கள், காந்திகிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா அவர்கள், ஆகியோர் நூல் கொடையினை வழங்கி மகிழ்ந்தார்கள்.
ஒளிபடக் கலைஞர் செல்வம் ராமசாமி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.
அனைவருக்கும் த ம அ மதுரைக் கிளையின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி சுலைகா பானு
தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைக் கிளை பொறுப்பாளர்
ஃபேஸ்புக் நேரலையாக ஒலிபரப்பு . . .
https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/996102405323474
நிகழ்ச்சியின் படங்கள்:
நூல் கொடை நல்கியவர்கள்: