‘தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ‘ மதுரைக்கிளை சார்பாக இம்மாத நிகழ்ச்சியாக முனைவர் பாப்பா அவர்கள் எழுதிய “விளையாடிய தமிழ்ச் சமூகம் “ நூல் அறிமுக நிகழ்வு செப்டெம்பர் 5, 2024 அன்று தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது . நிகழ்ச்சி ஏற்பாட்டினை தோப்பூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு லிங்கேஸ்வரி அவர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் . பட்டதாரி ஆசிரியர் திருமிகு பாக்கியசீலி அவர்கள் சிறப்பானதொரு வரவேற்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் தலைமை ஏற்று வந்திருந்த தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டியதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையுடன் அவர்களுடைய பயணம் பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்கள் தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரி. அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக நினைவுப் பரிசாகப் புத்தகமும் பயனாடையும் திருமிகு நஜுமுதீன் அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்கள். தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைக் கிளையின் பொறுப்பாளர் திருமிகு சுலைகா பானு அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையினைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை மாணவர்களிடம் வழங்கினார்கள்.
“விளையாடிய தமிழ்ச் சமூகம் “ என்ற நூலினை முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்கள் மாணவரிடம் சென்று சேரும் வகையில் சிறப்பானதொரு அறிமுகம் செய்து, அதோடு இணைந்து விளையாட்டின் முக்கியத்துவம் விளையாட்டில் மாணவர் சாதிக்க வேண்டும் என்பது போன்ற தன்னம்பிக்கை உரையையும் ஆற்றினார்கள்.
பட்டதாரி தமிழ் ஆசிரியர் சுமதி அவர்கள் நன்றியுரை கூறியதுடன் நினைவுப்பரிசாகப் புத்தகம் வழங்க, விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர் ஆசிரியர் திரு. சேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நன்றி
திருமிகு சுலைகா பானு
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக் கிளையின் பொறுப்பாளர்
காணொளி: https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1455284501846915
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
(மதுரைக் கிளை)
முனைவர் பாப்பா அவர்களின்
“விளையாடிய தமிழ்ச் சமூகம்“
நூல் அறிமுக நிகழ்ச்சி
நாள்: 5.9.2024 — வியாழக்கிழமை
நேரம்: மாலை மணி 3:00 — 4:00
இடம்: அரசு உயர் நிலைப் பள்ளி, தோப்பூர்
வரவேற்புரை:
திருமிகு லூ.பாக்கியசீலி M.A., B.Ed.,
பட்டதாரி தமிழ் ஆசிரியர்
நிகழ்ச்சித் தலைமை:
திருமிகு மு.லிங்கேஸ்வரி, M.Sc., B.Ed., M.Phil.,
தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, தோப்பூர்,
முன்னிலை:
உலகச் சாதனை நல்லாசிரியர்
திருமிகு மு.சுலைகா பானு, M.A., M.A., M.Phil., B.Ed.
நூல் அறிமுகம்:
முனைவர். தா. காட்வின்
தேசிய விருதாளர்,
உடற்கல்வி இயக்குநர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோவில்
நன்றியுரை:
திருமிகு கு.சுமதி M.A., B.Ed.
பட்டதாரி தமிழ் ஆசிரியர்