Home Events பள்ளூர் புத்தர் சிற்பங்கள்

பள்ளூர் புத்தர் சிற்பங்கள்

by admin
0 comment

அண்மையில் அரக்கோணத்திற்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 புத்தர் சிற்பங்களைக் காணச் சென்றிருந்தோம். ஆவணம் இதழ் 20 (பக்கம் 212)இல் ‘பள்ளூர் புத்தர் சிலைகள்’ குறித்த செய்தி ஒன்று உள்ளது; https://archive.org/details/avanam-journal/Avanam%202009%20Vol%2020/page/212/mode/1up

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வேலூருக்கு மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் காவனூர் என்றும், மேல்காவனூர் என்றும் அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூர், இரும்பு காலம் மற்றும் வரலாற்று ஆரம்பக்காலம் முதல் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் பகுதியாகும். இவ்வூரில் சில புத்தசமயச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் புத்தசமயம் தழைத்தோங்கியிருந்த காஞ்சிபுரம் மாநகருக்கு மேற்கே அமைந்துள்ள வேலூர் மாவட்டத்திலும் புத்தசமயம் பரவியிருந்தமையை அம்மாவட்டத்தின் சில இடங்களிலிருந்து கிடைத்த புத்தசமயச் சான்றுகளின் மூலம் அறியலாம். அரக்கோணம் வட்டத்தில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள பள்ளூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும், புத்தமேடு என்றழைக்கப்படும் பழங்கால வசிப்பிடப் பகுதியும் இவ்வூரில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வாலாஜாப்பேட்டை நகரத்திற்குத் தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமலைச் சேரியில் புத்தசமயத்தைச் சேர்ந்த தேரர்கள் வாழ்ந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.


You may also like