*காலாண்டு செயற்குழு கூட்டம் – செயலாளர் அறிக்கை*
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
[ஜூலை 1, 2024 — செப்டெம்பர் 30, 2024]
_____________________________________________________
1. சிறப்புக் கருத்தரங்கம் மாநாடு நிகழ்ச்சிகள்::
[A] உலகத் தமிழ்க் கலை இலக்கிய மாநாடு,
மட்டக்களப்பு – இலங்கை
2-3, ஆகஸ்ட் 2024
[B] 1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்!
இடம்: பச்சையப்பன் கல்லூரி, சென்னை
23, ஆகஸ்ட் 2024
சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கக் காணொளிகள்
1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
காணொளிகள் தொகுப்பு:
https://www.youtube.com/playlist?list=PLdag7q0k9BNmlnGajtc86s4ZZ9wHruAH_
_____________________________________________________
2. தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக செய்திகள், நூல் வெளியீடுகள்::
[A]
i. தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு:
தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூலை 11, 2024 அன்று;
நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பெற்ற முனைவர் க. சுபாஷிணி எழுதி தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பால் வெளியிட்ட; “ராஜாராஜன் கொடை” நூலுக்காக . . .
— முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கு ரூ.30,000/- பரிசுத் தொகையும்
“நூலாசிரியர் பாராட்டுச் சான்றிதழ் – 2022” என்ற நூலாசிரியர் பாராட்டுச் சான்றிதழும்
— நூலைப் பதிப்பித்த தமிழ்மரபு அறக்கட்டளைக்கு ரூ.10,000/- பரிசுத் தொகையும்
“பதிப்பகத்தார் பாராட்டுச் சான்றிதழ் – 2022” என்ற பாராட்டுச் சான்றிதழும்
பரிசுகளும் சான்றிதழ்களும் தமிழ்நாடு அரசால் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.
ii. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த நூல் பரிசுகளில், கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை வழங்கும் மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் என்ற பிரிவில், தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் மூலம் வெளியான, முனைவர் தேமொழி எழுதிய “இலக்கிய மீளாய்வு” நூல் பரிசு பெற்றுள்ளது.
[B]
4 நூல்கள் வெளியீடுகள்:
i. மட்டக்களப்பு: வரலாறு – சமூகம் – பண்பாடு
தொகுப்பாசிரியர்கள்: ஆ. பாப்பா, மு. இறைவாணி
ii. சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
நூலாசிரியர்: ஆர். பாலகிருஷ்ணன்
iii. மக்கள் வரலாறு தொடக்கமும் தொடர்ச்சியும் தொகுதி 1
நூலாசிரியர்: க. சுபாஷிணி
iv. தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
நூலாசிரியர்: க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக நூல்களை சென்னையில். டிஸ்கவரி புக் பேலஸ்; ஆழி பதிப்பகம்; எமரால்ட் பதிப்பகம் ஆகிய இடங்களில் நேரில் வாங்கலாம்
நூல்களை இணையம் வழியாக கீழ்க்காணும் தளங்களில் பெறலாம்:
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
https://wisdomkart.in/publisher/tamil-heritage-foundation/
_____________________________________________________
3. இணையவழி திசைக்கூடல் நேரலைகள்::
[A]
பருவநிலை மாற்றங்களும் நோய் பரப்பும் கிருமிகளும்
— முனைவர் தணிகைமலை
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி
திசைக்கூடல் – 361 [ஜூலை 13, 2024]
https://youtu.be/3VJh8rCQoxU
[B]
கிழக்கிலங்கையில் சோழர் – ஒரு வரலாற்றுப் பார்வை
— திரு. விவேகானந்தராஜா துலாஞ்சனன்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி
திசைக்கூடல் – 362 [ஜூலை 20, 2024]
https://youtu.be/7EjsJYSfric
[C]
பொலன்னறுவா பௌத்த விகாரைகள்
— முனைவர் ஆ. பத்மாவதி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி
திசைக்கூடல் – 363 [செப்டம்பர் 14, 2024]
https://youtu.be/dh2KbLqb5q0
[D]
சங்கம் பீடியா வலைப்பக்கம் – அறிமுகம்
https://sangampedia.net/
— அருணேஷ்குமார்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி
திசைக்கூடல் – 364 [செப்டம்பர் 29, 2024]
https://www.youtube.com/watch?v=QtUb4ux04wQ
_____________________________________________________
4. தமிழ் மரபு அறக்கட்டளை மரபுக் காணொளி வெளியீடு::
தமிழ் மரபுக் காணொளி வெளியீடு. . .
சோழ இளவரசர் ராஜாதித்தன் உயிரிழந்த தக்கோலப் போர்
— தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஆ. பத்மாவதி
செப்டெம்பர் 8, 2024,
https://youtu.be/PNaSkatElj8
_____________________________________________________
5. வரலாறு அறியும் மரபுப் பயணம்::
மெட்ராஸ் தின மரபு வழிப் பயணம்
24, ஆகஸ்ட் 2024 காலை 6:00 முதல் 8.30 மணி வரை.
_____________________________________________________
6. சுவலி — ஒலிநூல்கள்::
தமிழ் மரபு அறக்கட்டளையின்
சுவலி ஒலிநூல் திட்டத்தின் வழியாக. . .
ஜெயகாந்தன் – எழுதிய
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு – 4
நூலிலிருந்து இப்போது சில சிறுகதைகளை கேட்டு மகிழுங்கள்.
நூலை வாசித்து உதவியவர் பவானி முரளிகிருஷ்ணா
https://suvali.tamilheritage.org/ஜெயகாந்தன்-சிறுகதைகள்-த-4/
_____________________________________________________
7. இலக்கியக்கூடல் — மாதாந்திர நூல் திறனாய்வு நிகழ்ச்சி ::
[A]
ஜூலை மாத நூல் அறிமுகம். . .
தேமொழி எழுதிய ‘தமிழகத்தில் பௌத்தம்’ நூலை
மதுரைக்கிளை—தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஜூலை 21, 2024 அன்று
திருமிகு சுப. விஜய் ப்ரீத்தி நூலினை அறிமுகம் செய்தார்கள்.
https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/996102405323474
[B]
செப்டெம்பர் மாத நூல் அறிமுகம். . .
பாப்பா எழுதிய ‘விளையாடிய தமிழ்ச் சமூகம்’ நூலை
மதுரைக்கிளை—தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
செப்டெம்பர் 5, 2024 அன்று
முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் நூலினை அறிமுகம் செய்தார்கள்.
காணொளி: https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1455284501846915
_____________________________________________________
8. கல்விக் கொடைகள்::
இலங்கை மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு நூல்கள் சேகரிப்பு – 1500 நூல்கள் சேகரிக்கப்பட்டது
இலங்கை மட்டக்களப்பு நூலகத்திற்கு நூல்கள் சேகரிக்கும் பணி
மதுரையில் : ஜூலை 21, 2024 அன்று நடை பெற்றது
சென்னையில்: ஜூலை 28, 2024 அன்று நடை பெற்றது
இலங்கை மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு நூல்கள் சேகரிக்கும் திட்டத்தில்
தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக்குழுவினர் ஏறக்குறைய 300 நூல்களைச் சேகரித்தனர்
பாராட்டுகள் ஆசிரியை சுலைகா பானு
_____________________________________________________
9. தமிழ் மரபு அறக்கட்டளை செய்திகளைத் தொடர
நிறுவனத்தின் இணையதளம் …
https://thf-news.tamilheritage.org/
மற்றும் பிற சமூக வலைத்தளங்கள்
கூகுள் குரூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வாட்சப் அலைவரிசை ஓராண்டு நிறைவு
[செப்டம்பர் 2023 – 2024]
அறிக்கை தயாரிப்பு:
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
_____________________________________________________