Home Magazine தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 38 [அக்டோபர் — 2024] வெளியீடு

தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 38 [அக்டோபர் — 2024] வெளியீடு

by admin
0 comment

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…
தமிழ் மரபுத் திணை — 38 [அக்டோபர் — 2024] இன்று வெளியீடு காண்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “தமிழ் மரபுத் திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

இந்த இதழுடன் பின்னிணைப்பாக 2
சிறப்பிணைப்பு மலர்கள் வெளியாகின்றன

  1. மட்டக்களப்பில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு- 2024
  2. சிந்துவெளி நூற்றாண்டு (1924 – 2024 ) விழா கருத்தரங்கம்!

தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “தமிழ் மரபுத் திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.

காலாண்டிதழ் வரிசையில் இந்த 38 வது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 38
[அக்டோபர் — 2024]

இதழை . . .
தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தளத்தில்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2024/10/Tamil-Marabu-Thinai-38-October-2024.pdf
&
ஆர்க்கைவ்.ஆர்க் இணையத்தளத்தில்
https://archive.org/details/tamil-marabu-thinai-38-october-2024
இணையம் வழியாகப் படிக்கலாம்

ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர்கள் :
திரு. குமரன் சுப்ரமணியன்
திரு. அருள் மெர்வின்

படித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் — 38
[அக்டோபர் — 2024]

_________________
உள்ளடக்கம்:
_________________

தலையங்கம் viii
“திருமெய்யம் ஒப்பந்தம்” 1
“அம்பலமாகும் அம்பலம்” 7
மறையூர் கல்திட்டைகள் 10
வரலாற்றுச் செய்திகள் 14
ஊர்-சேரி-காலனி – மாற்றத்திற்கான தருணம் 24
தமிழ் மொழிபெயர்ப்பின் எதிர்காலம் 35
இலை அறிவியல் 48
தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் அறிவியல் சொல்லும் மெய்ப்பாடுகளும் 60
நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி! 77
சிறந்த நூலாசிரியர்கள் யார்? 85
புத்தகம் எனும் போர்வாள் 88
காஷ்மீர் 95
தஞ்சையில் சமணம் 115
தமிழக பௌத்தம் குறித்தான ஒரு கலைக்களஞ்சியம் 122
தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்-நூலறிமுகம் 127
தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சிகள் 135

திணை இதழின்  சிறப்பிணைப்பு மலர் - 1
மட்டக்களப்பில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு- 2024

            _________________
            உள்ளடக்கம்:
            _________________

உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு    
            —  முனைவர்.க.சுபாஷிணி    5
பொலன்னறுவை நகரின் மகா விகாரை    
            —  முனைவர் ஆ. பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர்    18
மட்டக்களப்பு பயண நினைவுகள்    
            —  பேரா. முனைவர். நா.கண்ணன்    35
நம்பிக்கை நட்சத்திரம்    
            —  முனைவர் பக்தவத்சல பாரதி    46
மீன்பாடும் மட்டு மாநகர்    
            —  முனைவர் ஆ. பாப்பா    53
மட்டக்களப்பு: கருத்தரங்கம் – நூலாக்கம் – கலை இலக்கிய மாநாடு    
            — முனைவர் மு.இறைவாணி    65
இலங்கையில் நடைபெற்ற தமிழர் கலை பண்பாட்டு விழா    
            —  முனைவர் கோ ஒளிவண்ணன்    74
மட்டக்களப்பு பயணம் ஒரு குடும்ப பயணம்    
            —  கீர்த்திவர்மன் பெருந்தச்சன்    81
மட்டக்களப்பு பயணம் ஒரு வெற்றிப் பயணம்    
            —  எழுத்தோவியர் என்.எஸ்.நாணா    86
நல்லதொரு அறிவுப்பூர்வமான பயணம்    
            —   கிருஷ்    92
மட்டக்களப்பு வரலாறு: தொன்மைக்கு வெளிச்சம் போடும்   தொகுப்பு….!    
            —  அழகு குணசீலன்    97

திணை இதழின் சிறப்பிணைப்பு மலர் – 2
சிந்துவெளி நூற்றாண்டு (1924 – 2024 ) விழா கருத்தரங்கம்!

_____
உள்ளடக்கம்:
_____

சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
— ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (பணிநிறைவு) 8
சரஸ்வதி நாகரிகம்: புனைவுகளை அறிதல்
— முனைவர் பக்தவத்சல பாரதி 16
சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்!
— ஆலடி எழில்வாணன் 51
சிந்துவெளிப் பண்பாட்டு எச்சங்களைத் தேடி ஒரு பயணம்
— முனைவர் மு. பாமா 72
“சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்” நூலறிமுகம்
— அ. கா. ஈஸ்வரன் 91

~~~~~~~~~~~~~~~~

தலையங்கம்

முனைவர்.க.சுபாஷிணி

வணக்கம்.
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு.

இந்த அடிப்படை உண்மையை அறிந்து கொண்ட உலக நாடுகள் இன்று தொல்லியல், அகழாய்வு, வரலாற்று ஆய்வு, மரபணுவியல் ஆய்வு ஆகியவற்றிற்குக் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன. மனித குலத்தின் தொடக்கம், பரிணாமத் தொடர்ச்சி, வாழ்வியல் சூழல் மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து மனித குலத்தின் பரவலாக்கத்தைத் துல்லியமாகக் கண்டறியத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள நடைபெறும் உலக நாடுகளின் முயற்சியில் தமிழர் வரலாறு தொடர்பான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளும் துரிதமாக விரிவான வகையில் நிகழ வேண்டிய தேவை உள்ளது.

தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி ஆவணப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் இக்காலாண்டில் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்கப்பட வேண்டிய தன்மை கொண்டவை. ஏனெனில் இரண்டு மாபெரும் கருத்தரங்குகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தி முடித்துள்ளது.

இலங்கை மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு நகரின் கலை பண்பாட்டுச் சிறப்பினை வலியுறுத்தும் வகையில் ஒரு மாநாட்டினை ஆகஸ்ட் 2-3 ஆகிய இரு தினங்கள் செய்து முடித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 23ஆம் தேதி சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை சென்னையில் நடத்தி ஆய்வுக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறது தமிழ் மரபு அறக்கட்டளை. இந்த இரு மாநாடுகள் பற்றிய சிறப்புத் தொகுப்புக்கள் இக்காலாண்டிதழில் இடம்பெறுகின்றன.

இக்காலாண்டிதழ் பரவலான பார்வையுடன் கூடிய ஆய்வுக் கட்டுரைகளையும் செய்திகளையும் கொண்டிருக்கின்றது. அத்துடன் சிறப்பு இணைப்பாக இடம்பெறுகின்ற மாநாட்டு இணைப்பு மலர்களும் கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன. நாம் வரலாறு படைக்கின்றோம் என்பதற்கான ஆவணமாக இக்காலாண்டிதழ் அமைந்துள்ளது. வாசகர்கள் அனைவருக்கும் இதில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு தகவலும் நிச்சயம் பயனளிக்கும்.

உலகளாவிய வகையில் வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் பரவலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற தமிழ் மரபு அறக்கட்டளை இன்று பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்ற ஓர் அமைப்பாகத் திகழ்கின்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம்.

தமிழ் வரலாற்றிலும், மொழி ஆய்விலும், பண்பாட்டு கலை தொடர்பான ஆய்வுகளிலும் ஆர்வம் கொண்டு எம்மோடு இணைந்து பயணிக்க வாருங்கள்.
தமிழால் இணைவோம்.தமிழால் இணைவோம்.

நன்றி
முனைவர் க. சுபாஷிணி

நிறுவனர்/தலைவர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி

You may also like