கெடா பூஜாங் பள்ளத்தாக்கின் சுங்கை பத்து தொல்பொருள் வளாகம்
https://youtu.be/3Xdg5QlL3Cg
சுங்கை பத்து தொல்பொருள் வளாகத்தை, அங்கு நடக்கும் அகழாய்வு, தொல் பொருட்கள், பண்பாட்டுப் பின்புலம் ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்கு விளக்குகிறார் முனைவர் க. சுபாஷிணி.
கடாரத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு தமிழர் தொடர்புகள் பற்றி அறிந்திருப்போம். சுங்கை பத்து அகழாய்வுப் பகுதி பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை..
அறிந்து கொள்வோமா..
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி மலேசியாவின் கெடா மாநிலத்திற்குச் சென்றிருந்த போது அங்கு செய்யப்பட்ட ஒரு பதிவு இது. ஒரு நகர அமைப்பு இருந்தமைக்கான, துறைமுகம் அருகிலேயே இருந்ததால் வணிக முயற்சிகள் நடந்த சான்றுகளையும் இந்தக் காணொளியில் காணலாம். தொல்லியலில் ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் இந்த 10 நிமிடக் காணொளியைப் பாருங்கள். அதோடு தமிழக பல்கலைக்கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இதனைக் காணுங்கள். இணைந்த வகையான ஆய்வுகளை மேற்கொள்ள இக்காணொளி முக்கியத் தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
இது தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு
கெடா பூஜாங் பள்ளத்தாக்கின் சுங்கை பத்து தொல்பொருள் வளாகம்
சுங்கை பத்து தொல்பொருள் வளாகத்தை, அங்கு நடக்கும் அகழாய்வு, தொல் பொருட்கள், பண்பாட்டுப் பின்புலம்…