சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல் – நூல் திறனாய்வு
– சிந்து வெளி ஆய்வாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் நேர்காணல்
நூல் திறனாய்வு : முனைவர் பாமா முத்துராமலிங்கம்
[டிசம்பர் 01, 2024, ஞாயிற்றுக்கிழமை]
இலக்கியக் கூடல் 2ஆம் நிகழ்வின் ஃபேஸ்புக் நேரலை சுட்டி :
https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1059482069199277
தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரை கிளையின் சார்பாக 1.12.24 அன்று இலக்கிய கூடலின் இரண்டாம் நிகழ்வாக “சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல் “ (சிந்துவெளி ஆய்வாளர் திரு ஆர் பாலகிருஷ்ணன் நேர்காணல்) என்ற நூலினை முனைவர் பாமா அவர்கள் மிகவும் சிறப்பாக திறனாய்வு செய்தார்கள்.
நிகழ்வில் நல்லாசிரியை மு. சுலைகா பானு, மதுரைக் கிளைப் பொறுப்பாளர் வரவேற்புரையாற்றி த ம அ பற்றிய அறிமுகம் செய்தார்.
பெரியார் நெறியாளர் திருமிகு பி . வரதராசன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்பானதொரு தலைமையுரை ஆற்றினார்கள் . த ம அ இன் பதிப்பகப் பொறுப்பாளர் முனைவர் பாப்பா அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.
கணினியில் கைதேர்ந்த முனைவர் பாமா அவர்கள் தமிழ் மொழி மற்றும் வரலாற்றின் மீது கொண்ட பற்று காரணமாக மிகவும் நேர்த்தியாக, கோர்வையாக எந்த வித குறிப்புகளும் கையில் இன்றி ஆண்டுகளையும் வரலாற்று ஆய்வாளர்கள் பெயர்களையும் கூறி அனைவரின் ஒட்டுமொத்த பாராட்டினையும் பெற்றார்.
நிகழ்வின் முடிவில் கலந்துரையாடலில் முனைவர் இறைவாணி அவர்கள், சென்னையில் இருந்து வந்திருந்த திரு சந்தானம் மற்றும் திரு தட்சணாமூர்த்தி அவர்கள், மற்றும் சட்டக் கல்லூரி மாணவி தமிழினி, தமிழ் தடம் அமைப்பினைச் சேர்ந்த திரு பிரபாகரன் மற்றும் ஒளிபடக் கலைஞர் திரு செல்வம் ராமசாமி அவர்கள் ஆகியோர் பாமா அவர்களைப் பாராட்டினார்கள்.
ஒவ்வொரு புத்தக அறிமுகத்தின் போதும் அப்புத்தகம் கிடைக்குமா … எங்கே கிடைக்கும் … எப்படி வாங்குவது எனப் பலர் கேட்பர்.
இம்முறை பாமா அவர்கள் புத்தகங்களை சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்ததால் , மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . நிகழ்வில் 11 புத்தகங்கள் விற்பனையானது.
நிகழ்வினைச் சிறப்பாக்கிய அனைவருக்கும் நன்றி.
நல்லாசிரியை மு . சுலைகா பானு
மதுரைக் கிளைப் பொறுப்பாளர்