Home THFi News தமிழ் வான் அவையின் சாதனைப் பெண் விருது-2025 பெறுகிறார் முனைவர் க. சுபாஷிணி

தமிழ் வான் அவையின் சாதனைப் பெண் விருது-2025 பெறுகிறார் முனைவர் க. சுபாஷிணி

by admin
0 comment

🔹🔸🔹 தமிழ் வான் அவையின் சாதனைப் பெண் விருது-2025 பெறுகிறார் முனைவர் க. சுபாஷிணி 🔹🔸🔹 

விருதுகள் நம்மை ஊக்குவிக்கின்றன: மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றன; மேலும் மேலும் செயலாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை வழங்குகின்றன. 
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த அயல்நாடுகளில் ஐரோப்பாவில் தமிழர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றது. ஐரோப்பாவில், அதுவும் குறிப்பாக ஜெர்மனியில் பல தமிழ்ச் சங்கங்கள் சிறந்த முறையில் செயலாற்றி வருகின்றன. தமிழ் கல்வி, பண்பாட்டுக் கலந்துரையாடல்கள், தமிழ் வானொலி, இலக்கிய முயற்சிகள் எனப் புலம்பெயர்ந்த இலங்கை தமிழ் மக்கள் பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். 
அத்தகைய ஓர் அமைப்பு “தமிழ் வான் அவை” அமைப்பு. இதனை ஜெர்மனியில் வாழ்கின்ற திருமிகு கௌசி அவர்கள் தலைமையேற்று இணைய வழி கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார். ஐரோப்பா மட்டுமன்றி ஆஸ்திரேலியா கனடா இலங்கை என பரந்துபட்ட வகையில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 
இவ்வாண்டு மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த அமைப்பு இரண்டு பேருக்கு சாதனையாளர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். அதில் ஒருவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றேன். நேற்று இணையம் வழி இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.  
கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, ஐரோப்பாவின் பல பகுதிகள், தமிழ்நாடு என உலகத் தமிழர்கள் நிறைந்த அவையில் இந்தச் சாதனை பெண் விருது பெற்றதை நினைத்து மனமகிழ்கிறேன்.
இசை, நடனம், கலந்துரையாடல், வாழ்த்துரை என பன்முகத் தன்மையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. 
எனது நெடுநாள் நண்பர் பேராசிரியர் டாக்டர் நா கண்ணன் அவர்கள் என்னை அறிமுகம் செய்து வைத்ததோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பற்றியும் விரிவாக அறிமுகம் செய்து வைத்தார். நெஞ்சிற்கினிய இனிய நண்பர்களின் இனிய சொற்கள் நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. அப்படித்தான் நேற்று அமைந்திருந்தது. நா. கண்ணனின் அன்பிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. 

என்னுடைய பேட்டி அடங்கிய ஒரு அறிமுகக் காணொளியை திருமிகு கௌசி அவர்கள் தயாரித்து நேற்று அதனை ஒளிபரப்பினார். அதன் லிங்க்: https://youtu.be/C9wZJqzCpdc
-சுபா31.3.2025

You may also like