தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்

0

தமிழ் மரபு அறக்கட்டளை – 2018ம் ஆண்டின் செயல்பாடுகள்

2018ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை  கடந்து வந்த பாதையை மீள்பார்வை செய்வது, வருகின்ற 2019ம் ஆண்டில் நமது பணிகளை நாம் மேலும் செம்மை படுத்தித் தொடர உதவும் எனக் கருதுகின்றேன். இனி தமிழ் மரபு அறக்கட்டளை 2018ம் ஆண்டில் நிறைவேற்றிய பணிகளைப் பற்றிய விபரங்களைக் காண்போம்....

0

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தமிழக தொல்லியல் ஆய்வுகள் – முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு

தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனைவர்.நடன காசிநாதன். இதுவரை 101 வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர் என்ற பெருமைக்குறியவர் இவர்.  பல்வேறு கருத்தரங்கங்களில் சொற்பொழிவுகள், கள ஆய்வுப் பணிகள் என இவரது பணி தமிழக தொல்லியல் துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தப்...

0

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: நடமாடும் கண்காட்சிக் கூடம் -திரு.வீரராகவன் சேகரிப்புக்கள்

அருங்காட்சியகங்கள் செல்வோர் அங்கு காட்சி படுத்தப்படும் பல்வேறு அரும்பொருட்களைப் பார்த்து  வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இதனால் கற்றல் என்பது சுவாரச்சியமானதாக அமைகின்றது. ஒரு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு.வீரராகவன். வரலாற்றின் மீது தான் கொண்ட தீராத ஆர்வத்தினால் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று...

0

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்

சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது  தமிழகத்தின் தரங்கம்பாடி.  தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள்,  அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக ஆய்வாளர்களுக்கு அமைகின்றன. ஐரோப்பிய குருமார்கள்...

0

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவை கூத்துக் கலைஞர்

இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவு வெளியீட்டில்  தோல்பாவைக் கூத்துக் கலையை தமிழகத்தின் நாகர் கோயில் பகுதியில் தொழிலாகச் செய்து வரும் கலைஞர் ஒருவருடைய பேட்டி இடம் பெருகின்றது. பரம்பரை பரம்பரையாகயாக ஏழாவது தலைமுறையாக இந்தக் கலையைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றார் இக்கலைஞர். மராட்டிய பின்புலத்தைக்...

0

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள்

இன்றைய வரலாற்றுப் பதிவில்  தமிழக தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் தமிழக அகழ்வாய்வுப் பணிகள் பற்றிய தகவல்கள் கொண்ட விழியப் பதிவினை வெளியிடுகின்றோம். தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த...

0

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவைக்கூத்து

தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள்.  75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள். கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இருந்த கலை இது....

0

மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் – புனித ஜார்ஜ் கோட்டையின் கதை [THF-Fort St. George Museum]

தமிழ் மரபு அறக்கட்டளையின்  வரலாற்றுப் பதிவு: மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் – புனித ஜார்ஜ் கோட்டையின் கதை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்பதன் வரலாறு மெட்ராஸிலிருந்து  துவங்கப்படவேண்டும் என்று விளக்கும் வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்கள், இன்றைய சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்குள்...

0

மண்ணின் குரல்: நவம்பர் 2018: கந்தரோடை, ஸ்ரீலங்கா – புராதன பௌத்த சின்னங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு இலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர்...

0

மண்ணின் குரல்: அக்டோபர் 2018: தாலாட்டுப் பாடல்

குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும்.  குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும்.  குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளைப் பாடல் வழியாகச்...