Home Events மணிலாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை

மணிலாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை

by admin
0 comment

மணிலாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை மற்றும் University of Perpetual Help System DALTA, Las Pinas தமிழ் மாணவர் அமைப்பு இன்று (16.12.2023)தொடங்கப்பட்டது.

University of Perpetual Help System DALTA பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றார்கள். இந்தக் கல்லூரி மாணவர்களுக்கான இணைக்கும் நிறுவனமான FENCE நிறுவனத்தின் இயக்குநர் திரு குணா, திரு‌.சைலபதி ஏற்பாட்டில் இன்று மாணவர்கள் பங்கேற்ற அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

வரலாற்றின் மேல் ஆர்வம் வரலாற்று ஆவண மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினேன். அது முடிந்து மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. பொறுப்பாளர்களாக ஐந்து மாணவர்கள் தங்கள் பெயர்களை வழங்கினார்கள். ஏனைய மாணவர்கள் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

எங்களுக்கு வரலாற்றுப் பாதுகாப்பு என்பது மிகப் புதிய ஒரு விஷயமாக இருக்கின்றது. ஆனால் இனிமேல் நாங்கள் ஆர்வத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக எங்களது ஊர் வரலாற்றையும் மணிலாவில் தமிழர் வரலாற்றையும் மணிலாவில் மக்களது வரலாற்றையும் ஆராய ஆர்வத்துடன் இருக்கின்றோம் என்று கூறினார்கள் மாணவர்கள்.

மாணவ மாணவியருடன் இருப்பதும் அவர்களோடு கலந்து உரையாடுவதும் எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, திருச்சி, மதுரை, வேலூர், கடலூர், நாகர்கோவில், விழுப்புரம் இப்படி பல பல பகுதிகளிலிருந்து வந்த மாணவ மாணவியர்.

இவர்கள் அனைவருக்கும் எனது சார்பிலும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பிலும் கல்வியிலும் வாழ்விலும் வெற்றிக்கான இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களுடன் மற்றும் நிர்வாகத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.

முனைவர் க. சுபாஷிணி
16.12.2023

You may also like