Home THFi News நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா: முனைவர் க. சுபாஷிணி

நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா: முனைவர் க. சுபாஷிணி

by admin
0 comment

நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா
—முனைவர் க. சுபாஷிணி
https://youtu.be/6hzIzcw8GJY

பிலிப்பைன்ஸ் மக்கள் அருங்காட்சியகம் வந்து செல்வதை மிகவும் ஈடுபாட்டுடன் செய்கின்றார்கள். அது பற்றி எனது கருத்தை 17.12.2023 அன்று நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் சென்றிருந்தபோது காணொளிப்  பதிவு செய்திருக்கின்றேன்.  பிரம்மாண்டமான காலனித்துவக் கட்டிடம் ஒன்றைத் தயார்ப்படுத்தி அதில் பல்வேறு காட்சியகங்களை உருவாக்கி நம்மை வியக்க வைக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள்.

மழைக்காடுகளின் உயிரினங்கள்:
ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப விலங்குகள் அமைகின்றன. 7500க்கும் மேற்பட்ட தீவுகள் கொண்டது பிலிப்பைன்ஸ் நாடு. இங்கு மிக முக்கியமான இயல்பான விலங்கு என்றால் அது எருமை அது தவிர்த்து உடும்பு, முதலை பல்வேறு பறவைகள், பூச்சிகள், தாவர வகைகள் ஆகியவற்றையும் தனித்துவத்துடன் நாம் நோக்க வேண்டி உள்ளது.

லகுனா மலாய்-சமஸ்கிருதச் செப்பேடு:
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ‘லகுனா மலாய்-சமஸ்கிருதச் செப்பேடு’  என்பது சக ஆண்டு 822 (கிபி 900)  எழுதப்பட்ட செப்பேடு.  இது பிலிப்பைன்சில் கண்டெடுக்கப்பட்ட நாள்காட்டி விபரம் கொண்ட முதல் ஆவணம் என்ற சிறப்புக்குரியது.  இந்தச் செப்பேடு வாவா பகுதிக்கு அருகே லும்பாங் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.  இது பழைய மலாய் மொழியும் சமஸ்கிருதமும் பழைய ஜாவா அல்லது தாகலோக் மொழியும் கலந்து எழுதப்பட்ட ஒரு கடன் பத்திரச் சான்றிதழாகும்.  கீழே இதன் அசல் வாக்கியங்களும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும்.

1 swasti shaka warshatita 822 waisakha masa ding jyotisha. chaturthi krishnapaksha so-
Hail! In the Saka-year 822; the month of March–April [= Vaishakh] according to the astronomer: the fourth day of the dark half of the moon; on
2 -mawara sana tatkala dayang angkatan lawan dengannya sanak barngaran si bukah
Monday. At that time, Lady Angkatan together with her relative, Bukah by name,
3 anakda dang hwan namwaran di bari waradana wi shuddhapat(t)ra ulih sang pamegat senapati di tundu-
the child of His Honor Namwaran, was given, as a special favor, a document of full acquittal, by the Chief and Commander of Tundun
4 n barja(di) dang hwan nayaka tuhan pailah jayadewa. di krama dang hwan namwaran dengan dang kaya- representing the Leader of Pailah, Jayadewa. This means that His Honor Namwaran, through the Honorable Scribe
5 stha shuddha nu di parlappas hutangda wale(da)nda kati 1 suwarna 8 di hadapan dang hwan nayaka tuhan pu-
was totally cleared of a salary-related debt of 1 kati and 8 suwarna (weight of gold): in the presence of His Honor the Leader of Puliran,
6 liran ka sumuran. dang hwan nayaka tuhan pailah barjadi ganashakti. dang hwan nayaka tu-
Kasumuran; His Honor the Leader of Pailah, representing Ganashakti; (and) His Honor the Leader
7 han binuangan barjadi bishruta tathapi sadanda sanak kaparawis ulih sang pamegat de-
of Binuangan, representing Bisruta. And, with his whole family, on orders of the Chief of Dewata
8 wata [ba]rjadi sang pamegat medang dari bhaktinda di parhulun sang pamegat. ya makanya sadanya anak
representing the Chief of Mdang, because of his loyalty as a subject (slave?) of the Chief, therefore all the descendants
9 chuchu dang hwan namwaran shuddha ya kaparawis di hutangda dang hwan namwaran di sang pamegat dewata. ini gerang
of His Honor Namwaran have been cleared of the whole debt that His Honor owed the Chief of Dewata. This (document) is (issued) in case
10 syat syapanta ha pashchat ding ari kamudyan ada gerang urang barujara welung lappas hutangda dang hwa …
there is someone, whosoever, some time in the future, who will state that the debt is not yet acquitted of His Honor…

எரிமலைக் குழம்பு கற்கள்:
கிழக்காசிய நாடுகளில் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஏராளமான  எரிமலைகளைக் கொண்ட நாடுகள். பெரும்பாலான தீவுகள் எரிமலை குழம்பினால் உருவானவை. விண்கற்கள், எரிமலை குழம்பிலிருந்து உருவாக்கப்பட்ட கற்கள், மண்ணுக்கடியில் வெட்டி எடுக்கப்படுகின்ற நிலக்கரி மற்றும் பல்வேறு வகையான விலை உயர்ந்த கற்கள், தங்கம் படிந்திருக்கும் கற்கள் போன்றவற்றை மணிலா நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் இங்கு காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள்.  வானிலிருந்து விழுகின்ற கற்களைக் கடவுளே அருளினார் என்று கூறிய ஒரு காலம் போய் இப்பொழுது விண்கற்கள் என்பவை யாவை என்று தெளிவு பலருக்கும் வந்து விட்ட காலம் இது.

இயற்கையை அதனைச் சேதப்படுத்தாமல் அதனைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இதற்கு நாம் வாழ்கின்ற நாடுகள் நமக்கு அருகாமையில் உள்ள நாடுகள் பற்றிய புவியியல் கருத்துக்கள் நமக்கு நல்ல புரிதலைத் தர வேண்டும். அத்தகைய ஒரு தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்த அருங்காட்சியகம்.

You may also like