மண்ணின் குரல்: மே 2016: ஸ்ரீசுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் – பெட்டி காளியம்மன், கும்பகோணம்

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தமிழகத்தின் கும்பகோணத்தில் உள்ளது. பிற்கால சோழ மன்னர்கள் கட்டிய இக்கோயில் 3ம் குலோத்துங்கன் (கி.பி 1186-1216) காலத்தில் மிக விரிவாக திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட விவரங்களை இங்குள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிபேஸ்வரகேஷத்திர கொரநாட்டுக் கருப்பூர் ஷேத்திர மகிமை பகுதி இக்கோயிலைப் பற்றி குறிப்பிடுகின்றது. 
இக்கோயிலில் இருக்கும் பெட்டி காளியம்மன் சன்னிதி தனித்துவம் வாய்ந்தது. 
எப்பொழுதும் பெட்டகத்தின் உள்ளேயே சுவாமி சிலையை வைத்திருக்கின்றார்கள். மகாகாளியின் உருவச்சிலை உடம்பின் பாதி வரை உள்ள ஒரு சிலையாக உள்ளது. எட்டு கைகள் கொண்ட மகாகாளிச் சிலை இது. அர்ச்சனை நேரத்தில் திறப்பது தவிர ஏனைய நேரங்களில் பெட்டிக்குள்ளேயே மகாகாளியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டிக்காளியம்மன் பற்றிய செய்திகளைத் தாங்கி வருகின்றது இன்றைய நமது விழியப் பதிவு.
விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/05/blog-post.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=hq8ZU5_IeKM&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப் பதிவை செய்ய உதவிய திருப்பணந்தாள் திரு.செந்தில் அவர்களுக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *