மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் – புனித ஜார்ஜ் கோட்டையின் கதை [THF-Fort St. George Museum]

தமிழ் மரபு அறக்கட்டளையின்  வரலாற்றுப் பதிவு: மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் – புனித ஜார்ஜ் கோட்டையின் கதை
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்பதன் வரலாறு மெட்ராஸிலிருந்து  துவங்கப்படவேண்டும் என்று விளக்கும் வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்கள், இன்றைய சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்குள் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு,  அருங்காட்சியகம், அங்குள்ள புனித மேரி தேவாலயம், அங்கு நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் குறித்து விளக்கம் தரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு  வரலாற்றுப் பதிவு இது.
பலரும் மறந்து போன இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், மெட்ராஸில் கடந்த 300 ஆண்டு காலகட்டத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
-அரிய பல சிற்பங்கள்
-நாணயங்கள்
-கோட்டை விரிவாக்கம்
-திப்பு சுல்தான்
-புனித மேரி தேவாலயத்தில் உள்ள தமிழ் கல்வெட்டு
…எனப் பல செய்திகள் அடங்கிய தொகுப்பு இது.
இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க: https://youtu.be/iBFgE-CPrgw
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *